Latest Videos

காலை டிபனுக்கு 'தாக்காளி பூரி' ஒரு முறை செஞ்சு பாருங்க.. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!

By Kalai SelviFirst Published May 23, 2024, 7:30 AM IST
Highlights

உங்கள் வீட்டில் கோதுமை மாவு இருந்தால், அதனுடன் தக்காளியும், ரவையும் சேர்த்து அட்டகாசமான சுவையில் பூரி செய்யலாம் வாருங்கள்.

தினமும் காலையில் இட்லி, தோசை செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா..? சற்று வித்தியாசமான, அதே சமயம் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஆரோக்கியமான காலை டிபனை செய்ய நினைக்கிறீர்களா..?உங்களுக்கான பதிவு தான் இது..

ஆம், உங்கள் வீட்டில் கோதுமை மாவு இருக்கா..? அதனுடன் தக்காளியும், ரவையும் சேர்த்து அட்டகாசமான சுவையில் பூரி செய்யலாம். இந்த 'தக்காளி பூரி' செய்வது மிகவும் சுலபமானது. அதே சமயம் குழந்தைகளும் இது ரொம்ப விரும்பியே சாப்பிடுவார்கள். இந்தப்  தக்காளி பூரி உடன் நீங்கள் பன்னீர் மசாலா வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். சரி வாங்க.. இப்போது தக்காளி பூரி எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:   சர்க்கரை நோயாளிகளுக்கு 'இந்த' இட்லி வரப்பிரசாதம்.. உடனே செஞ்சு சாப்பிடுங்க!

தக்காளி பூரி செய்ய தேவையான பொருட்கள்: 
கோதுமை மாவு - 2 கப்
ரவை - 1/4 கப்
அரைத்த தக்காளி - 1 கப் 
சீரகம் - 1 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன் 
சமையல் சோடா - 1 ஸ்பூன்
புதினா - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

இதையும் படிங்க:  1 கப் ரவை இருக்கா.. சூப்பரான அடை தோசை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ரெசிபி இதோ!

செய்முறை:
தக்காளி பூரி செய்ய முதலில், ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்த கோதுமை மாவு, ரவை, மிளகாய் தூள், சமையல் சோடா, புதினா இலை மற்றும் சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்குங்கள். பிறகு இதனுடன் அரைத்து வைத்த 1 கப் தக்காளியும் சேர்த்து பூரிக்கு மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளுங்கள். பின் 10 நிமிடம் அப்படியே மூடி வையுங்கள். 10 நிமிடம் கழித்து பிசைந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அதில் ஒன்றை எடுத்து சப்பாத்தி கல்லில் போட்டு தேய்த்து எடுங்கள். இப்படியே எல்லா உருண்டைகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு, அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தேய்த்து வைத்த மாவை போட்டு எடுத்தால், டேஸ்டான தக்காளி பூரி ரெடி..!! ஒருமுறை இந்த ரெசிபியை உங்களது வீட்டில் செய்து பார்த்து எப்படி இருந்தது என்று உங்களது பதிலை எங்களுக்கு தெரிவிக்க மறக்காதீர்கள்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!