இந்தப் பதிவில் மீள்மேக்கர் வைத்து பெப்பர் கிரேவி எப்படி செய்வது என்பதை குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தற்போது கோடை விடுமுறையில் குழந்தைகள் வீட்டில் இருப்பதால் பெரும்பாலானோரின் வீட்டில் சிக்கன், மட்டன் சமைப்பது தான் வழக்கமாக இருக்கும். ஆனால், இன்று நீங்கள் ஏதாவது ஒரு புதுவிதமான ரெசிபியை சமைக்க விரும்பினால் இந்த பதிவு உங்களுக்கானது தான்.
இன்று உங்கள் வீட்டில் நெய் சாதம் செய்யப் போகிறீர்களா..? இந்த சாதத்திற்கு வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு அற்புதமான சைடு டிஷ் செய்ய நினைத்தால், மீல்மேக்கரில் பெப்பர் கிரேவி செய்து சாப்பிடுங்கள்.
இந்த மீல்மேக்கர் பெப்பர் கிரேவி, நெய் சாதத்திற்கு மட்டுமின்றி குஸ்கா, சூடான வெள்ளை சாதம், சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடனும் வைத்து சாப்பிடலாம். இதன் சுவை சாப்பிடுவதற்கு சிக்கன் கிரேவி போல் இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுமட்டுமின்றி இந்த கிரேவி செய்வது ரொம்பவே ஈசி. சரி வாங்க இப்போது இந்த மீல்மேக்கர் பெப்பர் கிரேவி எப்படி செய்வது என்பதை குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
இதையும் படிங்க: வீடே மணக்கும் ஐயங்கார் ஸ்டைலில் முருங்கைக்காய் சாம்பார்.. ரெசிபி இதோ!
மீல்மேக்கர் பெப்பர் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
மீல்மேக்கர் - 2 கப்
மிளகு - 1 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 3
கிராம்பு - 4
பட்டை - 1 துண்டு
பெருஞ்சீரகம் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மல்லித் தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
கருவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: ராஜ்மாவில் இப்படி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. சுவை அட்டகாசமாக இருக்கும்.. ரெசிபி இதோ!
செய்முறை:
மீல்மேக்கர் பெப்பர் கிரேவி செய்ய முதலில், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எடுத்து வைத்த மீல்மேக்கரை போட்டு அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள். இதனுடன் உப்பு சேர்த்து கொள்ளுங்கள். தண்ணீர் கொதித்த உடன் அடுப்பை அணைத்துவிட்டு பாத்திரத்தை அதிலிருந்து இறக்கி விடுங்கள். 5 நிமிடம் மீல்மேக்கர் அந்த சூடான தண்ணீரிலே வையுங்கள். பிறகு அதிலிருந்து மீள் மேக்கரை எடுத்து குளிர்ந்த தண்ணீரில் இரண்டு முறை கழுவுங்கள். இப்போது அதிலிருந்து நீரை பிழிந்து எடுக்கவும்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மிளகு, பெருஞ்சீரகம், வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நிறம் மாறும் வரை அதை வதைக்கி பின் ஆற வையுங்கள். அவை நன்கு ஆறியதும் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கிராம்பு, பட்டை, கொஞ்சமாக பெருஞ்சீரகம் ஆகியவற்றை போட்டு தாளித்து கொள்ளுங்கள். பிறகு அதில் வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளுங்கள். இதனை அடுத்து அதில், தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாசனை போன பிறகு, அதில் மஞ்சள் தோல் மல்லி தூள் ஏற்கனவே அரைத்து வைத்த பொடி உங்கள் தேவைக்கேற்ப உறுப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறிவிடுங்கள்.
கடைசியாக அதில் மீல்மேக்கரை சேர்த்து நான்கு கிளறி விடுங்கள். இப்போது, கிரேவி பதத்திற்கு ஏற்றவாறு, அதில் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்த பிறகு அதன் மேல் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி இறக்கினால் அட்டகாசமான சுவையில், மீல்மேக்கர் பெப்பர் கிரேவி ரெடி!! இந்த ரெசிபியை ஒருமுறை உங்களது வீட்டில் செய்து பார்த்து, எப்படி இருந்தது என்று உங்களது பதிலை எங்களுக்கு தெரிவியுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D