Alum Benefits : 'படிகாரம்' உடலுக்கு தரும் நன்மைகள். பற்றி தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆவிங்க!

By Kalai SelviFirst Published Apr 12, 2024, 6:39 PM IST
Highlights

படிகாரத்தின் நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து இத்தொகுப்பில் நாம் தெரிந்துகொள்ளலாம்..

'படிகாரம்' பற்றி நம் அனவருக்கும் தெரியும்..இதை பொதுவாக பலர் தங்கள் வீட்டு வாசலில் கட்டி தொங்க விட்டு இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். படிகாரம் என்பது ஷேவிங் செய்த பிறகு ஆண்கள் அடிக்கடி முகத்தில் பயன்படுத்தும் ஒரு கனிமமாகும். 

இது இரண்டு நிறங்களில் இருக்கும். ஒன்று வெள்ளை, மற்றொன்று சிவப்பு. பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்த படிகாரம், வீடுகளில் தண்ணீர் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
படிகாரம், வேதியியல் ரீதியாக பொட்டாசியம் அலுமினியம் சல்பேட் என்று அழைக்கப்படுகிறது. படிகாரமானது, பல மருத்துவ குணங்கள் கொண்டது. இது ஆயுர்வேத மருத்துவத்திலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது பல உடல்நலப் பிரச்சினைகளையும் தடுக்க பெரிதும் உதவுகிறது.

இதையும் படிங்க: astro remedies: பண இழப்பை தவிர்க்க உங்கள் வீட்டில் படிகாரம் நீரை இப்படி பயன்படுத்துங்க..!!

குறிப்பாக, இது முதுகு வலியைக் குறைப்பதில் திறம்பட செயல்படுகிறது. மேலும், இவற்றின் தண்ணீரானது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆரோக்கிய நலன்களுக்காக இதை உடலின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. சரி வாங்க.. இப்போது படிகாரத்தின் நன்மைகள் என்ன என்பதை குறித்து தெரிந்துகொள்ளலாம்..

இதையும் படிங்க:  பணம் பெருக!! உங்க வீட்டில் படிகாரம் வச்சு பாருங்க.. எப்படி பண மழை பொழியும் தெரியுமா?

படிகாரத்தின் ஆரோக்கிய நன்மைகள்:

  • படிகாரத்தின் பெரிய நன்மை என்னவென்றால், அது நோய்தொற்றுகளை அழிக்கும். எனவே, இதை தண்ணீரில் போட்டு பின் பயன்படுத்தினால் பல கிருமிகள் அழிக்கப்படும்.
  • சிறுநீர் தொற்று இருந்தால், 1/2 டீஸ்பூன் படிகார பொடியை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடிக்கவும். இதனால் சிறுநீர் தொற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • படிகாரம் உடல் பருமனை குறைக்குமாம். இதனை உட்கொள்வதால் பசி தனிவதுடன் நீண்ட நேரம் வயிறு நிறைந்து இருக்கும்.
  • அதுமட்டுமின்றி பரிகாரம் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. இதை உட்கொள்வதன் மூலம் நரம்புகளில் படிந்துள்ள கெட்ட கொழுப்பு நீக்கி, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
  • படிகாரம் வாய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. படிகாரத்தைக் கொண்டு தொடர்ந்து பல் துலக்கி வந்தால், பல் வெண்மையாக மாறும். மேலும் இதை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால், பாக்டீரியாக்கள் நீங்கும், வாய் துர்நாற்றம் வராது
  • படிகாரம் இருமல், வறட்டு இருமல், ஆஸ்துமா, மலேரியா, தைராய்டு காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், சிறிது படிகாரத்தை தண்ணீரில் கரைத்து சிறிதளவு குடியுங்கள்.
  • இவற்றின் நீர் பிறப்புறுப்பு ஆரோக்கியத்திற்கு நல்லது. ஈஸ்ட் தொற்றுகளால் ஏற்படும் இரத்தப்போக்கை நிறுத்த இது உதவுகிறது. மேலும் இது வெள்ளைப்படுதல் பிரச்சனை மற்றும் தொற்று நோய்கள் குறையும்.
  • உடலில் ஏற்படும் பிடிப்புகள் மற்றும் வீக்கத்தைக் குறைக்க படிகார நீர் பெரிதும் உதவுகிறது. மற்றும் இது புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.
  • படிகாரம் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.  சிலர் எண்ணெய் சருமம் மற்றும் முகப்பருவைக் குறைக்க இதைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இது முகப்பருவுக்கு ஒரு சிறந்தது என்று எந்த ஆராய்ச்சியும் இல்லை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!