நீங்கள் தர்பூசணியை சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதன் விதைகளை எப்போதாவது சாப்பிட்டிருக்கிறீர்களா? ஆண்களுக்கு அது மிகவும் நல்லது.
திருமணத்திற்குப் பிறகு, ஒவ்வொரு ஆணும் தனது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்கு அவர்களது உடலில் எந்த பலவீனமும் இல்லாமல், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். பொதுவாகவே, ஒரு ஆண் தந்தையாக வேண்டும் என்றால் அவரது விந்தணுக்களின் எண்ணிக்கை சரியாக இருக்க வேண்டும். இல்லையெனில் கருவுறுதல் பலவீனமாகி, திருமண வாழ்க்கையில் கசப்பு ஏற்படும். மேலும் இதை தவிர்க்கவே முடியாதது. அத்தகைய சூழ்நிலையில், விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க
ஒரு குறிப்பிட்ட பழத்தின் விதைகள் உங்களுக்கு நிச்சயமாக உதவும்.
தர்பூசணி விதைகள்:
பொதுவாகவே, கோடை காலம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது தர்பூசணி. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கோடையில் இதை சாப்பிட்டால் உடலில் நீர்ச்சத்து குறையாது. இந்த ஜூசி பழத்தின் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரியும். ஆனால் இதில் இருக்கும் விதைகளின் நன்மைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா..? திருமணமான ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக தர்பூசணி விதைகளை சாப்பிட வேண்டும். அது அவர்களுக்கு என்ன பலன்களைத் தருகிறது என்று இப்போது தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..
ஆண்களுக்கு தர்பூசணி விதை நன்மைகள்:
எனவே, விந்தணு பிரச்சினை உள்ளவர்கள் இந்த பழத்தின் விதைகளை சாப்பிடுங்கள்.
தர்பூசணி விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
புரதம், செலினியம், துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் தாமிரம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் தர்பூசணி விதையில் உள்ளது. இதுதவிர, இது உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றை வழங்குகிறது.
தர்பூசணி விதையை எப்படி சாப்பிடுவது?
தர்பூசணி விதையை அப்படியே சாப்பிடலாம் என்பது ஒருவழி. மற்றொரு வழி என்னவென்றால், இந்த விதைகளை ஒரே இரவில் முளைக்க விட்டு, பிறகு அவற்றை வெயிலில் நன்கு காய வைத்து சாப்பிட வேண்டும். நீங்கள் விரும்பினால் அவற்றை வறுத்து கூட சாப்பிடலாம்.