Ramadan Specials 2024 : அசத்தலான ரம்ஜான் ஸ்பெஷல் ரெசிபிகள்!! கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க..

By Kalai Selvi  |  First Published Apr 10, 2024, 3:07 PM IST

இந்த ரம்ஜானுக்கு நீங்கள் உங்கள் வீட்டிலேயே செய்ய கூடிய அசத்தலான ரம்ஜான் ஸ்பெஷல் ரெசிபிக்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..


ரம்ஜான் இஸ்லாம் மக்களின் புனித பண்டிகையாகும். அந்தவகையில் இந்த 2024 ஆண்டு ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் 11ஆம் தேதி வியாழன்கிழமை, அதாவது நாளை வருகிறது. எனவே, இந்த ரம்ஜானுக்கு நீங்கள் உங்கள் வீட்டிலேயே செய்ய கூடிய அசத்தலான ரம்ஜான் ஸ்பெஷல் ரெசிபிக்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

Latest Videos

undefined

ஷீர் குர்மா:
தேவையான பொருட்கள்: 
பால் - 1 லிட்டர்
சேமியா - 1 கப்
நெய் - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 1/2 கப்
ரோஸ் வாட்டர் - 1 தேக்கரண்டி
குங்குமப் பூ - 1/4 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - ஒரு சீடிகை
முந்திரி, பாதாம் - தேவையான அளவு

செய்முறை:
இதை செய்ய முதலில், ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் எடுத்து வைத்த நட்ஸ்கள் போட்டு வதக்கிக் தனியாக எடுத்து வைக்கவும். அதேபோல, சேமியாவையும் நெய்யில் பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். அதேசமயம், ஒரு பாத்திரத்தில் பாலை நன்குக் காய்ச்சி அதில், வறுத்த சேமியாவை போட்டு கிளறவும். இதனுடன் சர்க்கரை சேர்க்கவும். அவை வெந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். பிறகு வறுத்து வைத்த நட்ஸ், ரோஸ் வாட்டர் , ஏலக்காய் பொடி மற்றும் குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும். அவ்வளவு தான். இப்போது சுவையான ருசியில் ஷீர் குர்மா ரெடி!!

இதையும் படிங்க:  Eid-Ul-Fitr 2024 Mehndi Tips: ரம்ஜானுக்கு மெஹந்தி போடுகிறீர்களா? ஒரே இரவில் சிவக்க 'இத' மட்டும் செஞ்சா போதும்!

சிக்கன் கபாப்:
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
முட்டை - 1
தனியா பொடி - 2 தேக்கரண்டி
மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
தந்தூரி கலர் - 1/2 தேக்கரண்டி 
சோள மாவு - 3 தேக்கரண்டி 
அரைத்த கொத்தமல்லி - 1/4 கப் 
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை:
இதனை செய்ய முதலில் சிக்கனை நன்கு கழுவி எடுத்து கொள்ளுங்கள். பின் ஒரு பாத்திரத்தில் சிக்கன் உட்பட மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு  கலந்து, ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் ஒரு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடானதும் சிக்கன் துண்டுகளைப் போட்டு நன்கு வறுத்து எடுக்க வேண்டும். அவ்வளவு தான். இப்போது சுவையான அசத்தலான சிக்கன் கபாப் ரெடி!!

இதையும் படிங்க: Happy Ramadan 2024 : ரம்ஜான் 2024 எப்போது..? புனித நாளின் தேதி, வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ!

சிக்கன் பிரியாணி:
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ (ஊறவைத்தது) 
பிரியாணி இலை - 2
கிராம்பு - 8
ஏலக்காய் - 4
பட்டை - 4 
தக்காளி - 2
நெய் - 1/2 கப்
தனியாப் பொடி - 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

பிரியாணி பேஸ்ட்:
புதினா - 1 கப்
கொத்தமல்லி - 1 கப்
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 6
தயிர் - 3/4 கப்
கசகசா - 2 tsp
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 தேக்கரண்டி

செய்முறை:
இதை செய்ய முதலில் ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி மேலே சொன்ன எல்லா மசாலாக்களையும் போட்டு வதக்கவும். அவை பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்க்கவும். பிறகு எல்ல பொடிகள் மற்றும் அரைத்து வைத்துள்ள புதினா பேஸ்ட், உப்பு சேர்த்து வதக்கவும். அடுத்ததாக அதில் சிக்கன் போட்டு கிளறவும். அதில் மசாலா சேர்ந்ததும் தண்ணீர் சேர்க்கவும். அடுத்ததாக ஊற வைத்த பாஸ்மதி அரிசி சேர்க்கவும். 2 விசில் வந்ததும் அணைத்துவிடவும். சிறிது நேரம் கழித்து குக்கரை திறக்கும்போது கொத்தமல்லி தழை தூவவும். அவ்வளவு தான் நாவூர சுவையான சிக்கன் பிரியாணி ரெடி!!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!