Tamil New Year 2024 : தமிழ் புத்தாண்டில் செய்ய வேண்டியவை..? செய்யக் கூடாதவை..?

By Kalai Selvi  |  First Published Apr 10, 2024, 10:38 AM IST

இந்த கட்டுரையில் தமிழ் புத்தாண்டு அன்று என்னென்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.


உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்கள் சித்திரை மாத முதல் நாளை தமிழ் புத்தாண்டாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். சித்திரைப் புது வருடமானது, புதிய எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகளை வைத்து மங்களகரமான திருநாளாக வரவேற்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.

இந்நிலையில், இந்த தமிழ் புத்தாண்டில் செய்யப்படும்  அனைத்துச் செயல்களும் சிறப்பாக செய்ய வேண்டும். மேலும் தமிழ் புத்தாண்டு அன்று பலர் புத்தாடை அணிந்து, கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். அதுமட்டுமின்றி, பெரியோர்களின் காலில் விழுந்து வணங்கி அவர்களின் ஆசீர்வாதம் பெறுவதும் வழக்கம். உங்களுக்கு தெரியுமா..சித்திரை வருடப் பிறப்பன்று செய்யும் அனைத்து செயல்களும் அந்த வருடம் முழுவதும் வாழ்க்கையை வளப்படுத்துமாம். எனவே, இந்த கட்டுரையில் தமிழ் புத்தாண்டு அன்று என்னென்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்...

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: Mesham Rasi Palan : குரோதி தமிழ் புத்தாண்டு 2024: மேஷ ராசிக்கு எதிர்பாராத பலன்கள் கிடைக்கும்!

தமிழ் புத்தாண்டு அன்று செய்ய வேண்டியவைகள்:

  • மா, பலா, வாழை, வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் போன்ற பொருட்களை ஒரு தட்டில் வைத்து அதை வீட்டின் பூஜை அறையில் வைத்து, புத்தாண்டு அன்று அதையெல்லாம் அதிகாலையில் பார்ப்பது புனிதமாகக் கருதப்படுகின்றது.
  • மேலும் புத்தாண்டு அன்று அதிகாலையிலேயே எழுந்து குளிந்து, வீட்டின் முன் கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவது மிகவும் நல்லது.
  • அதுபோல், தமிழ் புத்தாண்டு அன்று அறுசுவை உணவுகளான இனிப்பு, கசப்பு, உப்பு, காரம், துவர்ப்பு, புளிப்பு ஆகியவை இருக்க வேண்டும். அதுதான் சிறப்பு. பிறகு எல்லா வகையான சுவைகளும் கொண்ட உணவை படையலாகப் படைப்பது விசேஷமாகும். காரணம், எல்லாம்  கலந்தது தான் வாழ்க்கை என்பதை அறிவுறுத்தவே, இப்படி அறுசுவை கொண்ட உணவுகள் தமிழ் புத்தாண்டின் தொடக்கத்தில் படைக்கப்படுகிறது.
  • சித்திரை மாதம் கோடை காலத்தின் துவக்கமாகும். எனவே, கோடை காலத்திற்கு உகந்த தானங்களை தமிழ் புத்தாண்டின் தொடக்கத்தில் செய்வது நல்லது. குறிப்பாக இதை நீங்கள் எல்லா புத்தாண்டு அன்று செய்வது தான் சிறப்பு.
  • தோஷங்கள் நீங்கி, வாழ்க்கையில் நிம்மதி கிடைக்க உங்களால் முடிந்த அளவிற்கு குடை, செருப்பு, விசிறி ஆகியவற்றை தானமாக செய்யலாம். மேலும் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு வீடு வாசலில் தண்ணீர் வைப்பதும் சிறப்புதான்.
  • தமிழ் புத்தாண்டு அன்று தங்கம் அல்லது வெள்ளி நகைகளை வாங்கினால், அவைகள் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம்.
  • அதுபோல் கல் உப்பு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம் ஆகியவற்றை வாங்கினால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் மென்மேலும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிங்க: Rasi Palan : தமிழ் புத்தாண்டு 2024 ... தொட்டதெல்லாம் வெற்றி தான்.. தயாராக இருங்கள் ரிஷப ராசிக்காரர்களே!!

தமிழ் புத்தாண்டு அன்று செய்யக்கூடாதவைகள்:

  • தமிழ் புத்தாண்டு அன்று அசைவம் சாப்பிடுவது, தீட்டுக் காரியங்கள் செய்வது, நகம் வெட்டுவது, முகச் சவரம் செய்வது, முடி வெட்டுவது போன்ற செயல்களை ஒருபோதும் செய்யவே கூடாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
  • அதுபோல், இந்நாளில் வீட்டில் இருக்கும் போது ஒட்டடைகளை அகற்றவோ, வீட்டில் இருக்கும் குப்பைகளை வெளியில் கொட்டவோ கூடாது. குறிப்பாக, வீட்டில் இருக்கும் பொருட்களை அந்நாளில் யாருக்கும் கொடுக்க வேண்டாம்.
  • நினைவில் வைத்து கொள்ளுங்கள், தமிழ் புத்தாண்டு அன்று யாருக்கும் கடன் கொடுக்கவோ அல்லது  வாங்கவோ கூடாது.

பொதுவாகவே, புத்தாண்டு என்பது ஒரு புதிய தொடக்கத்தின் தருணம் என்பதால், அந்நாளில் நீங்கள் செய்யும் செயல்கள், உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்குவதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!