Pregnancy Tips: 40 வயதிற்கு மேல் குழந்தைக்கு திட்டமிடுகிறீர்களா?அப்படினா..நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

By Anu Kan  |  First Published Jun 24, 2022, 11:22 AM IST

Pregnancy Tips: வளரும் நாடுகளில் நான்கு தம்பதிகளில் ஒருவர் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் கூறுகிறது.


இன்றைய மேற்கத்திய கலாசாரத்தில், திருமணமாகி ஓரிரு ஆண்டுகளுக்கு குழந்தை பற்றிப் பெரும்பாலான தம்பதியினர் சிந்திப்பதே இல்லை. அதன் பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள முயலும்போது, வாழ்கை முறை மாற்றம், முறையில்லாத உணவு பழக்கங்களால் சிக்கல் ஏற்படுகிறது. இதன் காரணமாக, கருவுறுதல் இயற்கை முறையில் நிகழாததால், செயற்கை கருத்தரிப்பு முறையினை நோக்கி பெரும்பாலான தம்பதியினர் செல்கின்றனர். 

Latest Videos

undefined

இதனைத் தவிர்த்து, நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான சில பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் இயற்கை முறையில் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யலாம். அப்படியாக, கீழ்காணும் பழக்கங்களை தவிர்ப்பது விரைவாக கருவுற உதவும்.

உடற்பயிற்சி : 

உடற்பயிற்சி கருவுறுதலை மேம்படுத்த உதவக்கூடும், ஆனால் அதில் அதிக தீவிரம் கொண்ட பயிற்சிகள் கருத்தரித்தலில் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். எனவே,  உடற்பயிற்சி, எடை இழப்பு, ஹார்மோன் மாற்றங்கள், ஒழுங்கற்ற மாதவிடாய் , கர்ப்பம் தரிப்பதில் சிக்கலுக்கு வழிவகுக்கும்.

உடற்பருமன்:

உடற்பருமன் அதிகரிப்பு அல்லது உடற்பருமன் குறைப்பு, ஹார்மோன்களின் செயல்பாடுகளைப் பாதிக்கும். இவை கருத்தரிக்கும் வாய்ப்பைக் குறைக்கும். இவை சில சமயங்களில் மாதவிடாய் சுழற்சியையும் பாதிக்கும். எனவே, உங்கள் உடல் எடை சமநிலையில் இருக்க வேண்டியது மிக அவசியம்.

சர்க்கரை : 

கருவுறாமை நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிக சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது. அதற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளலாம்.

அதிகப்படியான பதற்றம்:

பதற்றங்களை நம் வாழ்க்கையிலிருந்து அகற்ற முடியாது. ஆனால், ஆய்வுகளின் முடிவுகளின் படி கர்ப்பத்திற்கு முயற்ச்சி செய்யும் போது, அதிக பதற்றமாக இருப்பது ஒரு பெண் கருத்தரிக்க வாய்ப்புகள் குறைவு என்று குறிப்பிடுகிறது.எனவே,  நீண்டகால மன அழுத்தம் தவிர்த்தல் நல்லது.
 
ஆல்கஹால் மற்றும் புகைபிடித்தல்:

ஆல்கஹால் குடிக்கும் நபர்கள், குழந்தையின்மைக் குறைபாடுகளை அதிக அளவில் எதிர்கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும்போது நீங்கள் மதுவை முற்றிலும் கைவிட வேண்டும். அதேபோன்று, புகைபிடித்தல் உங்கள் நுரையீரலை மட்டுமின்றி, உங்கள் கருவுறுதலையும் பாதிக்கும்.

 மேலும் படிக்க....Monkeypox virus: உலகை அச்சுறுத்தும் அடுத்த உயிர்கொல்லி நோய்...? அவசர நிலையை அறிவித்த உலக சுகாதார நிறுவனம்


 

click me!