Monkeypox virus: மக்களிடையே அடுத்த பெருந்தொற்றாக உருவிடுத்துள்ள, குரங்கு அம்மை நோயை அவசரநிலையாக அறிவித்து, உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு விடுத்துள்ளது.
கொரோனா தொற்று, பாதிப்பில் இருந்து உலக நாடுகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், அடுத்த அதிரடியாக மங்கி பாக்ஸ் எனப்படும் ஒரு வகை குரங்கு காய்ச்சல் நோய் பரவி மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி வருகிறது. உலகளவில் இந்த ஆண்டில் இதுவரை மட்டும், சுமார் 2,100 க்கும் மேற்பட்ட நபர்கள் குரங்கு அம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 84 சதவிகிதம் பேர் ஐரோப்பாவிலும், 12 சதவிகிதம் பேர் அமெரிக்காவிலும் பதிவாகியுள்ள நிலையில், வெறும் 3 சதவிகிதம் பேர் மட்டுமே ஆப்பிரிக்காவில் பதிவாகி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
குரங்கு அம்மை என்றால் என்ன..?
குரங்கு அம்மை என்பது குரங்கு அம்மை வைரஸால் ஏற்படும் ஓர் அரிய வகை தொற்று நோயாகும். குரங்கு அம்மை வைரஸ் என்பது போக்ஸ்விரிடே குடும்பத்தின் ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் இனத்தைச் சேர்ந்த ஒரு இரட்டை இழை டிஎன்ஏ வைரஸ் ஆகும்.
அறிகுறிகள் தெரிவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?
குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் குறைந்தது இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை இருக்கும். பொதுவாக நோய் பாதிப்புக்குளாகி 7 முதல் 14 நாள்களுக்குள் அறிகுறிகள் தென்படும். ஆனால் 5-21 நாட்கள் வரையும் இருக்கலாம் இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
குரங்கு அம்மை நோயின் பொதுவான அறிகுறிகள்..?
காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் மற்றும் இந்த நோயின் பொதுவான அறிகுறிகள் ஆகும். முதலில் சிவப்பு நிற கொப்பளங்களாக மாறும். அடுத்த 2 முதல் 4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும்.
வழிகாட்டுதல் நெறிமுறைகள்:
இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. அதன்படி, குரங்கு அம்மை பாதிப்புக்கு முறையான சிகிச்சை முறை இதுவரை இல்லை. பாதிப்புக்குள்ளான நபர்களை, உடனடியாக தனிமைப்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தோல் வெடிப்புகளை கிருமி நாசினிகளால் சுத்தம் செய்ய வேண்டும். வாய் புண்களை வெதுவெதுப்பான உப்பு நீர் வாய் கொப்பளிப்பதன் மூலம் நிர்வகிக்க வேண்டும்.
உலக சுகாதார நிறுவனம் அவசர நிலை அறிவிப்பு:
இது தொடர்பாக, குரங்கு அம்மை நோய் பரவுவது அசாதாரணமானது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். இந்த நிலையில், தற்போது மக்களிடையே அடுத்த பெருந்தொற்றாக உருவிடுத்துள்ள, குரங்கு அம்மை நோயை அவசரநிலையாக அறிவித்து உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு விடுத்துள்ளது.
மேலும், தற்போது உள்ள சூழ்நிலையில் சமூக பரவலாக மாறினால், தொற்றின் வேகம் அதிகரித்து குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் பிற நாடுகளில் பரவாமல் கட்டுப்படுத்துவதே நோக்கம் என்றும் தெரிவித்துள்ளது.