New Year Resolution 2025 : புத்தாண்டில் இந்த '5' விஷயங்கள் பண்ணறவங்க வாழ்க்கை பிரகாசிக்கும்!!  

By Kalai Selvi  |  First Published Dec 26, 2024, 1:28 PM IST

New Year Resolution 2025 Ideas : புத்தாண்டில் வாழ்க்கையை பிரகாசிக்க வைக்கும் உறுதிமொழிகள் குறித்து இப்பதிவில் காணலாம். 


2025ஆம் ஆண்டில் உங்களுடைய வாழ்க்கையை எப்படி மாற்ற வேண்டும் என விரும்புகிறீர்களோ அதற்கேற்ற உறுதிமொழிகளை புத்தாண்டில் எடுத்துக் கொள்ளவேண்டும். உதாரணமாக நீங்கள் ஆரோக்கியமாக மாற விரும்பினால் 'உடற்தகுதியை' மேம்படுத்தும் இலக்கை நிர்ணயிக்கலாம். அதில் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவு பழக்கம், சரியான நேரத்தில் தூக்கம் போன்ற  உறுதிமொழிகளை எடுக்கவேண்டும். மன ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால் யோகா, தியானம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும். இந்த பதிவில் உங்களுக்கு உதவக்கூடிய சில உறுதிமொழிகளை காணலாம். 

பொருளாதார முன்னேற்றம்: 

Tap to resize

Latest Videos

undefined

நீங்கள் பொருளாதார முன்னேற்றத்தை குறிக்கோளாக கொண்டிருந்தால் அதற்கேற்ற மாதிரி உறுதிமொழிகள் ஏற்க வேண்டும். உங்களுடைய வருமானத்தில் 50% சேமிப்பு, சுகாதார காப்பீடு, பங்குகளில் முதலீடு செய்வது போன்றவற்றை செய்யலாம். அநாவசியமான செலவுகளை குறைத்தால் கணிசமாக சேமிக்க முடியும். உதாரணமாக நீங்கள் ஒரு செல்போன் வாங்குறீர்கள் என்று வைத்துகொள்வோம். உங்களிடம் ஏற்கனவே நல்ல செல்போன் இருந்தால் அவசியமான காரணங்களுக்காக இல்லாமல் இன்னொரு செல்போன் வாங்கக் கூடாது. புது மொபைலுக்கான  பணத்தை கடனாக பெறக் கூடாது. செல்போனுக்கான பணத்தை நீங்கள் முழுமையாக சம்பாதித்து இருக்க வேண்டும். இல்லை என்றால் அது உங்களுடைய சேமிப்பு பணமாக இருக்க வேண்டும். ஒரு செல்போனை  வாங்கிய பின், அதற்கு ஈடான தொகை உங்கள் கையில் இருக்க வேண்டும். இப்படி  இருந்தால் மட்டுமே அந்த செலவை நீங்கள் செய்ய வேண்டும் என உறுதிமொழி எடுத்தால் அநாவசிய செலவை குறைக்கலாம். 

இதையும் படிங்க:  புத்தாண்டு முதல் பிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு புதிய விதிகள்! ஆர்பிஐ அறிவிப்பு!

ஒரு மணிநேர விதி: 

தினமும் 1 மணி நேரம் உடலுக்காக ஒதுக்க வேண்டும். யோகா, தியானம், உடற்பயிற்சிகளை தவறாமல் ஒருமணி நேரம் செய்ய பழகினால் உடல், மன ஆரோக்கியம் மேம்படும். நாள்தோறும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். வாரத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து நாட்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என உறுதிமொழி எடுத்தால் உங்களுடைய உடற்பகுதி இலக்கை நீங்கள் சுலபமாக அடைய முடியும். 

இதையும் படிங்க:  2025 இல் விமானப் பயணம் ரொம்ப சீப்பு... இண்டிகோவின் அதிரி புதிரி ஆஃபர்!

புதிய விஷயங்களை பழகுதல்: 

புத்தாண்டில் நீங்கள் புதிய விஷயங்களை செய்ய உறுதிமொழி எடுக்கலாம். சமையல், தையல், நடனம், ஜிம்னாஸ்டிக், புத்தகம் படிக்க பழகுதல் போன்றவற்றை செய்ய உறுதிமொழி எடுக்கலாம். உங்களுடைய வேலையில் முன்னேற புதியதாக ஒரு பட்டப்படிப்பை பயிலலாம். புதிய மொழி ஏதேனும் கற்றுக்கொள்ள முயற்சி செய்யலாம். புதிய பழக்கங்களை கற்றுக் கொள்ளுதல் உங்களுடைய தன்னம்பிக்கையை வளர்க்க உதவும். 

உறவுகளுக்கு முக்கியத்துவம்: 

உங்களுடைய வேலை, படிப்பு போன்ற காரணங்களுக்காக குடும்பத்தினருடன், காதலி அல்லது காதலனுடன் நேரம் செலவிடாமல் தவிர்த்து வந்தால் அந்த பழக்கத்தை மாற்ற முயற்சி செய்யுங்கள்.  உங்களுக்கு பிரியமானவர்களுக்கு நேரம் ஒதுக்க உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். 

கெட்ட பழக்கங்களை கைவிடுதல்: 

உங்களிடம் இருக்கும் கெட்டப் பழக்கங்களை கைவிட முயற்சி செய்யுங்கள். புகைபிடித்தல், மது அருந்துதல், செல்போன் அதிகம் பயன்படுத்துதல் போன்றவை இருந்தால் அதை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். 

நன்றியுணர்வு முக்கியம்; 

உங்களுடைய வாழ்க்கையில் நன்றியுணர்வு அவசியமாக கருதப்படுகிறது. உங்களுக்கு நடக்கும் சின்ன சின்ன நல்ல விஷயங்களுக்கும் நன்றி உணர்வை வெளிப்படுத்துவது வாழ்க்கையை திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க உதவுகிறது. அதனால் இந்த புது வருடத்தில் நன்றி உணர்வை பழக்கப்படுத்தி கொள்ள உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்.

click me!