மாட்டு வால் சூப்: 30 வயது கடந்த பெண்களுக்கு ரொம்பவே நல்லது.. சிம்பிள் ரெசிபி!

By Kalai Selvi  |  First Published Jan 13, 2025, 2:58 PM IST

Mattu Vaal Soup Recipe: மாட்டு வால் சூப் செய்வது எப்படி? மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை பற்றி இங்கு காணலாம்.


மாட்டு வால் சூப் பற்றி நீங்கள் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம்முடைய ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். மூட்டு வலி முதல் முடி உதிர்வு வரை என பல பிரச்சினைகளை இது உதவுகிறது. இப்படி நம்முடைய உடலுக்கு தேவையான நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் மாட்டு வால் செய்வது எப்படி என்றும், அது குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்றும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  'முடவாட்டுக்கால் கிழங்கு' சூப் குடிங்க.. மூட்டு வலி, முடக்கு வாதத்திற்கு குட் பை சொல்லுங்க..!!

Tap to resize

Latest Videos

மாட்டு வால் சூப் செய்ய தேவையான பொருட்கள்:

மாட்டுவால் - 1
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
தக்காளி - 2
இஞ்சி - 2 துண்டு
பூண்டு - 20
சீரகம் - 2 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
பெருஞ்சீரகம் - 2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க: இருமலை விரட்ட செட்டிநாடு சிக்கன் சூப் செய்து சாப்பிடுங்க!

செய்முறை:

முதலில் மாட்டு வாலை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி பிறகு, அதை நன்றாக சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இஞ்சி மற்றும் பூண்டை நன்றாக இடித்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மிளகு, சீரகம், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பொடியாக இடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் எடுத்து வைத்த தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் ஒரு குப்பையை வைத்து அதில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்று சூடாகவும். பிறகு அது சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும்வரை வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் பொடியாக நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளி நன்றாக மசிந்ததும் அதில் இடித்து வைத்த இஞ்சி, பூண்டை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் கழுவி வைத்த மாட்டு வாலை சேர்த்து சுமார் 2 நிமிடம் வதக்கவும்.

அடுத்ததாக அதில் இடித்து வைத்த மிளகு, சீரகம், பெருஞ்சீரகத்தை சேர்த்து ஒருமுறை கிளறி விடுங்கள். இதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது மாட்டுவால் மூழ்கும் அளவிற்கு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுமார் 20 விசில் விட்டு இறக்கவும். குக்கரில் விசில் போன பிறகு மூடியை திறந்து அதில் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை தூவி விடுங்கள். அவ்வளவுதான் கமகமனு மாட்டு வால் சூப் ரெடி.

மாட்டு வால் சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

1. எலும்புகளை பலப்படுத்தும்: மாட்டுவாலில் இருக்கும் சத்துக்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக இதில் அதிக அளவு புரதச்சத்து இருப்பதால் இது எலும்புகளின் வளர்ச்சியை அதிகரிக்க செய்கின்றது. முக்கியமாக குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது முதுகு வலி மற்றும் மூட்டு வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கும். முதுகெலும்பு பிரச்சனைகள் பாதிக்கப்பட்டவர்கள் இதை வாரத்திற்கு ஒரு முறை குடிக்க வேண்டும்.

2. கர்ப்பிணிகளுக்கு நல்லது: பெண்கள் விரைவில் கர்ப்பம் தரிக்கவும், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தேவையான சத்துக்களை அளிக்கவும் மாட்டு பால் சூப் உதவுகிறது.

3. பெண்களுக்கு நல்லது: 30 வயது கடந்த ஒவ்வொரு பெண்களும் கண்டிப்பாக வாரத்திற்கு ஒருமுறையாவது மாட்டு வால் சோப்பு குடிக்க வேண்டும் ஏனெனில் இது பெண்களின் எலும்புகளின் ஆரோக்கிய குறைபாடுகளை சரி செய்ய உதவுகின்றது.

4. ரத்த அழுத்தத்தை சரி செய்யும்: மாட்டுவால் சூப் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும், ரத்த அழுத்த பிரச்சனை சரி செய்யவும் உதவுகிறது. மேலும் மூலையில் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

5. தலைமுடி மற்றும் சருமத்திற்கு நல்லது: மாட்டு வால் சூப் தலை முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்யவும், முடி ஆரோக்கியமாக இருக்கவும், இளநரை வராமல் தடுக்கவும் உதவுகிறது. சருமத்திற்கும் நன்மை பயக்கும்.

click me!