Sakkarai Pongal Recipe : பொங்கல் பண்டிகையில் ஸ்பெஷல் எதுவென்றால், அது சர்க்கரை பொங்கல் தான். எனவே, தித்திப்பான சர்க்கரை பொங்கல் செய்வது எப்பசி என்று இங்கு காணலாம்.
தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் வீடுகளை மா தோரணையால் அலங்கரித்து, கோலமிட்டு பொங்கல், புத்தாடை உடுத்தி, கோயிலுக்கு சென்று வழிபட்டு, பொங்கல் வைத்து, கரும்பு தின்று உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்வார்கள். பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷல் எதுவென்றால் அது வெல்லம் பச்சரிசி பால் கொண்டு செய்யப்படும் சர்க்கரை பொங்கல் தான். இது எல்லார் வீட்டிலும் கண்டிப்பாக சமைப்பார்கள். ஆனால் இன்றும் கூட சிலருக்கு சர்க்கரை பொங்கல் சுவையாக செய்ய தெரியாது. அத்தகையவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், சர்க்கரைப் பொங்கலை சுவையாக சமைப்பது எப்படி என்று ஈஸியான செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பொங்கல் என்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள். அவர்கள் அனைவரும் சாப்பிட்டு மகிழ்வார்கள். இப்போது தித்திப்பான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: அப்பார்ட்மெண்ட்ல 'இந்த' கோலத்தை போடுங்க; பாக்குறவங்க அசந்து போவாங்க..!!
சர்க்கரைப் பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/2 கப்
பாசி பருப்பு - 3 ஸ்பூன்
வெல்லம் - 3/4 கப்
நெய் - 4 ஸ்பூன்
உலர் திராட்சை - 15
முந்திரி - 10
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
தண்ணீர் - 4 கப்
சூடம் (விரும்பினால்) - 1 சிட்டிகை
இதையும் படிங்க: Pongal 2025: ஒரே நாள்ல 'முகப்பரு' நீங்கி 'பொங்கல்' அன்று முகம் ஜொலிக்க டிப்ஸ்!!
செய்முறை:
சர்க்கரைப் பொங்கல் செய்ய முதலில் அரிசியை தண்ணீரால் நன்கு கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் அதில் பாசிப்பருப்பு போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளுங்கள். அடுத்ததாக அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். அதனுடன் கழிவு வைத்துள்ள அரிசியையும் போட்டு குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
இப்போது மற்றொரு அடுப்பில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் எடுத்து வைத்துள்ள வெல்லத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். வெல்லம் நன்றாக கரைந்ததும் அதை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
குக்கரில் விசில் போன பிறகு அதை திறந்து அதில் வெல்லப்பாகுவை ஊற்றி மீண்டும் அடுப்பில் வைக்கவும். இப்போது அதனுடன் ஏலக்காய், கிராம்பு, வேண்டுமானால் சூடம் சேர்த்து சுமார் 5 நிமிடம் கிளறி விடுங்கள். மறுபுறம் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரி, உலர் திராட்சை போட்டு பொன்னிறமாக வறுத்து அதை குக்கரில் இருக்கும் பொங்கலுடன் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். அவ்வளவுதான் தித்திப்பான சர்க்கரை பொங்கல் தயார்.
இந்தாண்டு பொங்கல் பண்டிகையை கண்டிப்பாக இந்த சர்க்கரை பொங்கலுடன் கொண்டாடி மகிழுங்கள்.