Maha Shivaratri worship: மகா சிவராத்திரி விழா...ஆட்டம், பாட்டம் என சிவாலயங்களில் நாடு முழுதும் உற்சாக வழிபாடு!

By Anu Kan  |  First Published Mar 2, 2022, 7:01 AM IST

Maha Shivaratri worship: மகா சிவராத்திரியை முன்னிட்டு, நாடு முழுதும் சிவாலயங்களில் .ஆட்டம், பாட்டம் கொண்டாடங்களுடன் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.


மகா சிவராத்திரியை முன்னிட்டு, நாடு முழுதும் சிவாலயங்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள நேற்று கங்கையில் புனித நீராடினர்.

உத்தர பிரதேசத்தின், தாராகஞ்ச் நகரில் உள்ள நாக்வாசுகி மற்றும் யமுனை நதிக் கரையில் உள்ள மங்காமேஷ்வர் கோவில்களில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று காலை முதல் ஏராள மான பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபாடுகளை நடத்தினர். அத்துடன், கங்கையில் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாக அதிகாரிகள் கூறினர். பக்தர்களின் வசதிக்காக, கோவில்களின் சுற்றுப் பகுதிகளில், 650 நவீன கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

Tap to resize

Latest Videos

அதேபோல், தற்காலிக மருத்துவமனை மற்றும் முதல் உதவி மையங்களும் செயல்பாட்டில் இருந்தன. இதுபோல நாடு முழுதும் சிவாலயங்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். 

தமிழகம் முழுக்க உள்ள சிவாலயங்களில் மாகா சிவராத்திரி முன்னிட்டு மிகப் பெரிய வழிப்பாட்டாகக் கொண்டாடப்படுகிறது. கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உலக பிரசித்திபெற்றது உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகமும், அலங்காரங்களும் செய்யப்பட்டு பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

மேலும் படிக்க...Today astrology: சிவனின் அருளால் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி இன்று முதல் தலைகீழாக மாறும்! இன்றைய ராசி பலன்!

காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு உலக புகழ்பெற்ற இமயமலையிலுள்ள அமர்நாத் பனி லிங்கத்தைப் போலவே தத்ரூபமாக அச்சு அசலாக அதனைப் பிரதிபலிக்கும் விதமாகப் பனி லிங்கமானது அமைக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக அமர்நாத் புலிங்கத்தைத் தரிசிக்கக் காடு மற்றும் மலை வழியாகப் பக்தர்கள் செல்வது போலவே தத்ரூபமாக அதற்கான பாதை அமைக்கப்பட்டு பொது மக்கள் பனி லிங்கத்தைத் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இமயமலை அமர்நாத் புலிங்கத்தை இதுவரையிலும் நேரில் சந்திக்காதவர்கள் எனக் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் பொது மக்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் சில மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்த பனி லிங்கத்தைத் தரிசித்து சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.

மேலும் படிக்க...Lord shiva weapon: சிவபெருமானின் காக்கும் ஆயுதங்கள்..அழிக்கும் ஆயுதங்கள்..! சிறப்பான ஆயுதங்கள் என்ன..?

click me!