Ukraine-Russia War: ரஷ்யாவும் உக்ரைனும் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ''போரை உடனே நிறுத்துங்கள்'' நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்று குட்டி குழந்தை ஒன்று மழலையில் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது, அந்த செய்தி, பார்க்கும் ஒவ்வொருவரின் கண்களிலும், கண்ணீர் வர வைக்கிறது.
ரஷ்யாவும் உக்ரைனும் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ''போரை உடனே நிறுத்துங்கள்'' நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்று குட்டி குழந்தை ஒன்று மழலையில் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது, அந்த செய்தி, பார்க்கும் ஒவ்வொருவரின் கண்களிலும், கண்ணீர் வர வைக்கிறது.
உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா பின்வாங்க தயாராக இல்லை. ஒருபுறம் பேச்சு நடத்த உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தபோதும், அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷியா இறங்கி உள்ளது.
உக்ரைன் ராணுவம், போரில் இதுவரை 5710 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறியுள்ளது. 29 போர் விமானங்கள், 846 கவச வாகனங்கள் உள்ளிட்டவற்றை அழித்திருப்பதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில், உலகெங்கிலும் உள்ள பலர் அமைதியை நாடுகின்றனர். ரத்தக்களரியை முடிவுக்கு கொண்டு வரவும், முற்றுப்புள்ளி வைக்கவும் விரும்புபவர்களின் கோரிக்கைகளுக்கு ரஷ்யா செவிசாய்க்கவில்லை.
இந்த சூழலில், சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில் ஒரு சிறுமியின் வெகுளித்தனமான முறையீடு இதயங்களை வென்றுவிடும். இந்த வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகிறது. அதில் அந்த சிறுமி, “பூமியில் அமைதி வேண்டும். பூமி துண்டாகக்கூடாது. நாம் அனைவரும் சகோதர சகோதரிகள். போரை நிறுத்துங்கள்" என்று மழலையில் கோரிக்கை விடுக்கிறார்.
ஆனால், இந்த குட்டிப் பெண்ணின் கோரிக்கை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இதயத்தைத் தொடுமா? என்ற கேள்வி பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றுகிறது.
பிரிட்டானி & லில்லி என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து இந்த வீடியோ அண்மையில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இன்ஸ்டா கணக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கின்றனர். இந்த வீடியோ, இதுவரை 1.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதில் பார்வையாளர் ஒருவர், "நான் உக்ரைனைச் சேர்ந்தவன், மற்ற நாடுகளின் இத்தகைய ஆதரவைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி” என்று ஒரு கூறியுள்ளார். மற்றொருவர், நீ நன்றாக வர வேண்டும். "உனக்கு ஆசீர்வாதம் லில்லி" என்று கூறினார். தற்போது, இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு உலகையே உலுக்கி வருகிறது.