
இன்றைய நவீன வாழ்கை முறையில், சர்க்கரை நோய் என்பது 40 ஐ கடந்த நம் அனைவருக்கும் வரும் பொதுவான நோயாக மாற துவங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நம்முடைய உணவு பழக்கவழக்கம், உடற்பயிற்சி இல்லாமை, உடல் உழைப்பில்லாமை போன்றவையாகும். அதுமட்டுமின்றி, கொரோனா தொற்று ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் கொஞ்ச நஞ்சம் அல்ல. இது நம் அனைவருக்கும் பொருளாதர நெருக்கடி, வறுமை, உணவு பற்றாக்குறை, தொழிலில் மாற்றம், கூடவே மன அழுத்தம், இவை எல்லாம் நம்மை பாடாய் படுத்தி வருகின்றனர்.
இவை நமக்கு நீரழிவு நோய் போன்ற பல்வேறு உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளை வழங்குகிறது. மேலும், சர்க்கரை நோய் இதய நோய், பக்கவாதம் போன்ற பல நோய்களை ஏற்படுத்தக் கூடியது. கர்ப்பிணிப் பெண்களுக்கு கூட கர்ப்ப கால சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இவற்றை தவிர்ப்பதற்கு நாம் சில பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது அவசியம். அவை, என்னென்ன என்று கீழே பார்த்து தெரிந்து வைத்து கொள்ளலாம்.
சாப்பிட வேண்டிய தாவர அடிப்படையிலான உணவுகள்:
தாவர அடிப்படையிலான உணவுகளை உட்கொள்வது நீரிழிவு நோயின் அபாயத்தை குறைப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பச்சை காய்கறிகள், கீரை வகைகளை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக, காய்கறி சூப், கிரீன் டீ , மதியம் காய்கறி கலவையில் உணவு என உங்கள் உணவு பழக்கங்களை மாற்றிக்கொள்ளுங்கள். மேலும், முளைகட்டிய பயிறு வகைகள். முட்டை, போன்றவையும் அடிக்கடி அவசியம் சேர்த்து கொள்ளுங்கள். இப்போது, அனைத்து சூப்பர் மார்க்கெட் கடைகளிலும் சூப்பிற்கென்றே பிரத்தேகமாக தயாரிக்கப்பட்ட நார் சூப் போன்ற பாக்கெட்டுகள் கிடைக்கின்றனர். இவற்றை வாங்கி வீட்டில், சூப் தயார் செய்யலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
ஐஸ்கீரிம். சாக்லேட், எண்ணெய் உணவுகள், சர்க்கரை உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஜங்க் ஃபுட்ஸ் போன்றவற்றை தவிர்த்துவிடுவது நல்லது. குறிப்பாக, மேற்கத்திய உணவு கலாசாரத்தை விட்டு விட்டு நம்முடைய பாரம்பரியத்தை கடைபிடுங்கள்.
கார்போஹைட்ரேட் உணவுகள்:
கார்போஹைட்ரேட்தான் சர்க்கரை நோய்க்கு எதிரியாக உள்ளது. கார்போஹைட்ரேட்தான் குளுக்கோஸாக மாறி உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு குளுக்கோஸ் அளவை அதிகரித்துவிடும். எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி கார்போஹைட்ரேட் அளவை உட்கொள்வது நல்லது.
எப்போதும், ஆக்டிவாக இருங்கள்:
சர்க்கரை நோயாளிகள் எப்போதும், ஆக்டிவாக இருப்பது அவசியம். உடலில் உருவாகும் குளுக்கோஸ் அளவை அவ்வப்போது ஆற்றலாக பயன்படுத்திவிட வேண்டும். அப்போது தான் உடலுக்கும் வேலை இருக்காது. எனவே, நீங்கள் கட்டாயம் உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுவது, யோக போன்ற செயல்களில் ஏதேனும் ஒன்றில், குறைந்தது 30 நிமிடம் ஈடுபட வேண்டும்.
சர்க்கரை அளவை அடிக்கடி சரி பார்த்தல்:
வாரம் இரண்டு முறையாவது, இரத்தத்தின் சர்க்கரை அளவை சரி பார்த்து கொள்ளுதல் அவசியமாகும். இதனால் சர்க்கரை அளவை சீரான நிலையில் நிர்வகிக்க முடியும். சாப்பிட்டவுடன் , சாப்பிட்ட பின் ஏற்படும் மாறுபாடு என்ன எந்தெந்த உணவுகள் ரத்த சர்க்கரை அளவை கூட்டுகின்றனர். என்பனவற்றை, குறித்து வைத்து கொள்ளுங்கள். இவை உங்களுக்கு சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவுகளை தவிர்த்துவிட உதவியாக இருக்கும்.
மன அழுத்தம் இல்லாமல் இருங்கள்:
மன அழுத்தம் வருவது உடலில் பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக, டைப் 2 நீரிழிவு நோய் உருவாக மன அழுத்தம் முக்கிய காரணமாக அமைவதாக சமீபத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. அதாவது மன அழுத்தத்தின்போது கெட்ட ஹார்மோனான கார்டிசோல் அதிகமாக வெளியிடப்படுகிறது இது குளுக்கோஸ் அளவையும் அதிகரித்துவிடுகிறது எனவே முடிந்த வரை மன அழுத்தமின்றி இருப்பது நல்லது. எனவே, நீங்கள் மகிச்சியூட்டும் செயல்களில் ஈடுபட வேண்டும்.
எனவே, மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.