Today Astrology: சூரியனின் நட்பு ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் பலன் தரும். புகழ், பதவி உயர்வு, வெற்றி, கௌரவம் போன்றவை சூரியனின் நட்பு ராசிக்காரர்களுக்கு இன்று முதல் தேடி வரும்.
Today Astrology: சூரியனின் நட்பு ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் பலன் தரும். புகழ், பதவி உயர்வு, வெற்றி, கௌரவம் போன்றவை சூரியனின் நட்பு ராசிக்காரர்களுக்கு இன்று முதல் தேடி வரும்.
வாழ்வதும், வீழ்வதும் அவர் அவர் கையில் என்றாலும், ஜோதிடத்தின் படி, ராசி பலன்களை வைத்தும் ஒருவரது வாழ்கை செல்லும் பாதையை எளிதில் கண்டறியலாம். அவற்றில், முக்கியமாக கிரகங்களின் நிலையில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
undefined
இவை ஒரு சிலருக்கும், நல்லதாகவும், சில சமயம் கெட்டதாகவும் அவை அவருக்கு ஏற்ற பலன்களை தருகிறது.கிரக இட மாற்றங்களில் சூரியனின் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
அதன்படி, மார்ச் 15, 2022 அன்று சூரியன் தனது ராசியை மாற்றி மீன ராசியில் நுழைகிறார். மீனம் சூரியனின் நட்பு ராசி என்பதால் 5 ராசிக்காரர்களுக்கு சூரியனின் இந்த சஞ்சாரம் வலுவான பலன் தரும். அவர்களுக்கு, வாழ்வில் செல்வம் செழிக்கும், மகிழ்ச்சி பொங்கும். அவர்களுக்கு, இன்று முதல் புகழ், பதவி உயர்வு, வெற்றி, கௌரவம் போன்றவை தேடி வரும்.
சூரியனின் சஞ்சாரம் வலுவான பலன்கள் பெறப்போகும் 5 ராசிகள்:
ரிஷபம்:
ரிஷபம் ராசிக்காரர்களின் வருமான வீட்டில் சூரிய பகவான் சஞ்சரிக்கப்பார். இந்த சஞ்சாரத்தால் இவர்களுக்கு சிறப்புப் பலன்கள் கிடைக்கும். ரிஷப ராசிக்காரரகளுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரத்தில் நிதி சிக்கல்களில் இருந்து விடுபட நல்ல வாய்ப்பு உள்ளது. சூரிய பகவான் சஞ்சரிப்பால் தொழிலில் சிறப்பு கவனம் செலுத்துவீர்கள். முதலீடு செய்வதற்கும் இந்த நேரம் மிகவும் நல்ல நேரமாக இருக்கும். குறிப்பாக சொத்தில் முதலீடு செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மொத்தத்தில் இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியின் வேலை வியாபார வீட்டில் சூரியன் சஞ்சரிக்கப் போகிறார். சூரியனில் சஞ்சரம் மிதுன ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கப் போகிறது. மிதுன ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். தடைபட்ட வேலைகள் முடியும். சூரியனின் இந்த மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு ஒரு புதிய வேலைக்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் இந்தக் காலத்தில் பலன் அடைவார்கள். அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு பெரிய பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.வணிக பயணத்தினால் லாபம் உண்டாகும்.
கும்பம்:
சூரியனில் இந்த சஞ்சரம் கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். நிதி நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். பணம் சம்பாதிக்க பல புதிய வழிகள் திறக்கும். உங்களின் கடின உழைப்பு வீண் போகாது. இந்த காலகட்டத்தில் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். கும்பம் ராசிக்காரர்களின், பொருளாதார நிலை மேம்படும். தடைபட்ட வேலைகள் முடியும். பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் இந்தக் காலத்தில் பலன் அடைவார்கள்.
தனுசு:
சூரியனில் இந்த சஞ்சரம் தனுசு ராசிக்காரர்களுக்கு அளப்பரிய பலன்களைத் தரும் என்கின்றனர் ஜோதிடர்கள். தனுசு ராசிக்காரர்களின் வருமானம் கூடும். தொழிலில் முன்னேற்றம் அடைய அதிகப்படியான வாய்ப்புகள் கூடி வரும். தொழிலிலும் லாபம் கூடும். இதனுடன், மகிழ்ச்சி மற்றும் சொத்துக்கான வீட்டுக்கும் சூரியன் வருகிறார். ஆகையால், இந்த நேரம் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிக அதிர்ஷ்டத்தைத் அளிக்கும். செல்வம் பெருகும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உருவாகும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் இந்த சஞ்சாரம் பல நன்மைகளைத் தரும். இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட வீட்டில் சூரியன் சஞ்சரித்து இவர்களது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கச்செய்வார். இதனால் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். உங்களின் கடின உழைப்பு வீண் போகாது. இந்த காலகட்டத்தில் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். பெரிய பதவிகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது. இவர்கள் பணியிடத்தில் உயர் பதவியைப் பெறலாம். மொத்தத்தில், இந்த நேரம் கடக ராசிக்காரர்களுக்கு ஜாக்பார்ட் அடித்தது போன்ற அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும்.