
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, பெண்களையும் அவர்களது உரிமைகளையும் பாதுகாக்கும், சட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நமது அரசாங்கம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை உருவாக்கி சட்டத்தின் முன் அனைத்து மக்களுக்கும் சம உரிமை அளித்துள்ளது. இதில் ஆண், பெண், உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடும் இல்லை என்பதை சட்டப்பூர்வமாக்கியுள்ளது.
பெண்களின் உழைப்பும் முன்னேற்றமும் அங்கீகரிக்கப்பட்டு சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. பெண் உழைத்தால் உயர்வுதான். ஆனால், உழைப்போடு தனக்கான உரிமைகளையும் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தடுப்பதற்கும் இந்தியாவில், பல்வேறு சட்டங்கள் உள்ளன. இனிமேல், உஙக்ளுக்கு இழைக்கப்படும், அநீதிக்கு, குரல் கொடுக்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிட்டு சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பெண்ணும் சட்டமும்:
அடிப்படை மனித உரிமைகள், பெண்ணின் சிறப்பு உரிமைகள் பற்றிய தெளிவு எல்லாப் பெண்களுக்கும் அவசியம் தேவை, அத்தகைய அறிவும், தெளிவும் பெண்களுக்குத் தைரியத்தையும், முன்னெச்சரிக்கை உணர்வையும் தரும், ஆண்கள் மீது சார்ந்துள்ள நிலைமையும் வெகுவாகக் குறைக்க உதவும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும், தகர்க்கவும், தெளிவையும் ஊக்கத்தையும் சட்ட அறிவு தரும் என்பதில் ஐயமில்லை.
சம ஊதிய சட்டம், 1976:
ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள் என்றாலும், ஊதிய ஏற்றத்தாழ்வு பிரச்சனையை பெண்கள் உலகம் முழுவதும் இன்னமும் எதிர்கொள்கிறார்கள். கூலி வேலையில் தொடங்கி பல்வேறு வேலைகளிலும் இந்த ஊதிய பிரச்சனைகள் நீண்டு கொண்டே செல்கிறது. எனவே தான் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம ஊதியத்தை உறுதி செய்யும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
2. கருக்கலைப்பை சில நேரங்களில் சட்ட ரீதியாக செய்யலாம்:
கர்ப்பத்தின் மருத்துவ முடிவு சட்டம் 1971 படி, சட்டரீதியான கருக்கலைப்புகள் சில நிபந்தனைகளின் கீழ் மட்டுமே செய்யப்படுகின்றன.
கருக்கலைப்பு:
கர்ப்பத்தின் தொடர்ச்சியானது தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் போது, கர்ப்பங்களை கலைக்க உதவுகிறது.
கடுமையான வன்புணர்வு, பாலியல் வன்கொடுமை அல்லது கற்பழிப்பு உள்ளிட்டவை காரணமாக உருவாகும் கர்ப்பங்களை கலைக்க உதவுகிறது.
3. குடும்ப வன்முறைக்கு எதிரான உரிமை:
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களுக்கும், குடும்பத்தில் இழைக்கப்படும் அநீதி. ஆகியவற்றை தட்டி கேக்கிறது. குடும்ப வன்முறை என்பது உடல் ரீதியான துஷ்பிரயோகம் மட்டுமின்றி மன, பாலியல் மற்றும் பொருளாதார துஷ்பிரயோகங்களையும் உள்ளடக்கியது.
4. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் 2013:
இந்தச் சட்டத்தின்படி, பணியிடத்தில் ஐந்து வகையான நடத்தைகள் பாலியல் துன்புறுத்தலாக கருதப்படுகின்றன. உடல் ரீதியான தொடர்பு, பாலியல் விருப்பங்களுக்கான கோரிக்கை அல்லது பாலினவாத கருத்துக்களை பேசுதல், ஆபாச படங்களை காட்டுதல் மற்றும் விரும்பத்தகாத உடல், வாய்மொழி அல்லது வாய்மொழி அல்லாத பாலியல் நடத்தை ஆகியவற்றிற்கு தண்டனை வழங்கப்படுகிறது.
திருமணத்திற்கு ஆண் 21 வயது நிறைந்தவராகவும், பெண் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருத்தல் வேண்டும்.திருமணம் செய்ய மணமக்கள் இருவரும் இயல்பான மன நிலையில் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.பொதுவாக மணமக்கள், திருமணத்தின்போது, வேறு திருமணத் தொடர்பில் இருக்கக்கூடாது.
இந்து திருமணச்சட்டம் - 1955
கிறிஸ்துவ திருமணச் சட்டம் - 1872
முஸ்லிம் திருமணச் சட்டம்.
5. சுயமரியாதைத் திருமணச்சட்டம்:
சுயமரியாதைத் திருமணச்சட்டம், இவ்வகைத் திருமணங்களில் சம்பிரதாய சடங்குகள், இல்லாமல் இருந்தாலும், அவ்வாறு நடைபெறும் திருமணங்கள் செல்லுபடியாக, 1967-இல் சுயமரியாதைத் திருமணச்சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம், இந்து திருமணச்சட்டத்தில் பிரிவு 7என தமிழ்நாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
6. அந்த வரிசையில் இந்திய விவாகரத்து சட்டம், 2001 :
2001ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் ஆண் -பெண் இருவரும் விவகாரத்து பெறுவதை எளிமையாக்குகிறது. இந்து திருமண சட்டம் 1995 பிரிவு 13பி-டின் படி ஆணும், பெண்ணும் பரஸ்பரம் விவாகரத்து கோரினால், அவர்கள் கட்டாயம் ஓராண்டு சேர்ந்து வாழ்த்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் இந்திய விவாகரத்து சட்டம் வழக்கின் சூழலுக்கு ஏற்ப ஓராண்டுகள் இணைந்து வாழாத தம்பதிக்கும் விவாகரத்து வழங்க அனுமதி அளிக்கிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.