Morning Healthy Foods For Kids : தினமும் காலையில் குழந்தைகளுக்கு வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டிய 5 முக்கிய உணவுகளைப் பற்றி இப்போது இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
குழந்தைகளின் முழு வளர்ச்சிக்கு சரியான அளவு ஊட்டச்சத்து கொடுப்பது மிகவும் அவசியம். ஆனால், இன்றைய காலத்தில் பல குழந்தைகள் காலையில் ஆரோக்கியமற்ற உணவை தான் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால், இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கை விளைவிக்கும். இன்னும் சில குழந்தைகளோ காலை சாப்பிடுவதை விரும்ப மாட்டார்கள். இந்த பழக்கங்கள் எதிர்காலத்தில் அவர்களுக்கு பல மோசமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் உணவு பழக்கத்தில் தனி சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.
இந்நிலையில், உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க நீங்கள் விரும்பினால், அவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை தினமும் சாப்பிட கொடுங்கள். அந்த வகையில், தினமும் காலையில் குழந்தைகளுக்கு வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டிய 5 முக்கிய உணவுகளைப் பற்றி இப்போது இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
இதையும் படிங்க: Parenting Tips : உங்க குழந்தை ஸ்கூல் விட்டு வந்தவுடன் முதல்ல 'இந்த' கேள்விகளைக் கேளுங்கள்..!
குழந்தைகளுக்கு தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட கொடுக்க வேண்டிய 5 உணவுகள் இவையே..
1. பாதாம்:
பாதாம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதே நாம் அனைவரும் அறிந்ததே. முக்கியமாக, இது வளரும் குழந்தைகளுக்கு ரொம்பவே நல்லது. ஏனெனில், இதில் இரும்பு சத்து, புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஈ போன்ற அத்தியாவாசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனது தினமும் காலை வேரும் பயிற்சியில் அவர்கள் பாதாம் சாப்பிட்டு வந்தால், அவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும் மற்றும் அவர்களது உடலும் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும்.
2. வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட், இரும்பு, சோடியம் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது. உங்கள் குழந்தை ஒல்லியாக இருந்தால் தினமும் காலை வெறும் வயிற்றில் அவர்களுக்கு வாழைப்பழம் சாப்பிட கொடுங்கள். இதனால் அவர்களது எடை அதிகரிக்கும். இது தவிர, அவர்களின் எலும்புகளும் வலுவடையும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
இதையும் படிங்க: Parenting Tips : பெற்றோர்களே உங்க குழந்தை அதிக நேரம் போன் யூஸ் பண்றாங்களா..? அப்ப உடனே 'இத' செய்ங்க..
3. நெல்லிக்காய்:
நெல்லிக்காய் ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷம் ஆகும். ஏனெனில், இதில் இரும்பு கால்சியம் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் என ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. எனவே, இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களது கண் பார்வை மேம்படும். இது தவிர, அவர்களது வயிறும் நன்றாக இருக்கும். மேலும், பருவக்காலப் பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது. எனவே, உங்களுக்கு குழந்தைக்கு நெல்லிக்காய் ஜூஸ் கொடுங்கள்.
4. ஆப்பிள்:
ஆப்பிளில் கால்சியம் இரும்பு துத்தநாகம் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. தினமும் காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு ஆப்பிள் சாப்பிட கொடுத்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வலுவடையும் மற்றும் அவர்களது கண் பார்வையும் கூர்மையாக இருக்கும்.
5. சூடான நீர்:
குழந்தையாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி காலையில் பல் துலக்கிய உடன் முதலில் சூடான நீரை தான் குடிக்க வேண்டும். இதை பழக்கமாக்கிக் கொண்டால் மிகவும் நல்லது. குறிப்பாக, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகள் சூடான நீரை குடித்து வந்தால், அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு மட்டுமின்றி, பருவ கால தொடர்பான நோய்களின் அபாயமும் குறையும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D