Relationship Advice : தனக்கு திருமணமாகி பாலியல் ஆசை இல்லை என்றும், தான் ஓரினச்சேர்க்கையாளராக இருப்பேனோ என்று புலம்பி தவிக்கும் ஆணுக்கு நிபுணர் அளிக்கும் பதிலை இங்கு பார்க்கலாம்.
தனக்கு திருமணமாகி பாலியல் ஆசை இல்லை என்றும், தான் ஓரினச்சேர்க்கையாளராக இருப்பேனோ என்று புலம்பி தவிக்கும் ஆணுக்கு நிபுணர் அளிக்கும் பதிலை இங்கு பார்க்கலாம்.
கேள்வி: "எனக்கு வயது 35. எனது பெற்றோர் எனக்கு 30 வயது உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர், ஆனால் நான் இன்னும் என் மனைவியுடன் உடலுறவில் ஈடுபடவில்லை. சொல்லபோனால், எனக்கு பாலியல் ஆசையும் இல்லை. ஒருவேளை நான் ஓரினச்சேர்க்கையாளராக இருப்பேனோ என்று எனக்கு தோன்றுகிறது. இதனால் நான் என் மனைவியை விவாகரத்து செய்து விடவா? அல்லது நான் ஓரினச்சேர்க்கையாளரா.. இல்லையா.. நான் ஏதாவது ஒரு பரிசோதனை செய்ய வேண்டுமா? எனக்கு ஒன்றும் புரியவில்லை. இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு விளக்குகள்" என்று அவர் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'என் மனைவி வயிற்றில் சுமப்பது வேறொரு ஆணின் குழந்தை' தவிக்கும் ஆணுக்கு நிபுணரின் தீர்வு!!
நிபுணர் பதில்: முதலில் உங்களது பாலில் அடையாளத்தை நீங்கள் தீர்மானியுங்கள். உங்களைப் போலவே பலரும் தங்களது பாலிய நோக்கு நிலை குறித்து குழப்பத்தில் இருக்கிறார்கள். எனவே, உங்களைப் பற்றி உங்களுக்கு சந்தேகம் ஏதேனும் இருந்தால், உடனே ஒரு நல்ல செக்ஸ் தெரபிஸ்டை போய் பாருங்கள்.
இதையும் படிங்க: 'என் மனைவி லெஸ்பியன்னு தோனுது.. அவர் பண்ற காரியங்கள் அப்படி இருக்கு' குழம்பும் வாசகருக்கு பதில்!!
ஓரினசேர்க்கையாளர் என்று எப்படி அறிவது?:
நீங்கள் ஓரின சேர்க்கையாளரா.. இல்லையா..? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், மிக முக்கியமான ஒரு விஷயம் எதுவென்றால், முதலில், நீங்கள் உங்களை தொடர்ந்து கவனித்து கொள்ள வேண்டும். ஆம், முடிந்தவரை உங்களை நீங்களே கவனிக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் யாரை மிகவும் விரும்புகிறீர்கள் என்பதை சுலபமாக அறிந்து கொள்ளலாம். அதாவது, நீங்கள் ஆண் அல்லது பெண்ணை என இருவரில் யாரை அதிகம் விரும்புகிறீர்கள் என்பதை கண்டுபிடித்து விடலாம். ஒருவேளை, உங்களுக்கு ஆண்கள் மீது அதிகமாக ஈர்ப்பு இருந்தால் நீங்கள் ஓரின சேர்க்கையாளர் என்று அர்த்தம்.
அதுமட்டுமின்றி நீங்கள் உங்களை எல்லா வகையிலும் சோதித்துப் பாருங்கள். உதாரணமாக, நீங்கள் ஒரு பையன் என்றும், கடற்கரையில் இருக்கிறீர்கள் என்றும் அங்கு நீங்கள் ஆண்கள், பெண்கள் இருந்தால், நீங்கள் ஆண்களை தான் அதிகம் என்றால் கண்டிப்பாக நீங்கள் ஓரின சேர்க்கையாளர் தான். எனவே நீங்கள் இது போன்ற எல்லா வழிகளையும் உங்களை நீங்களே சோதித்து பாருங்கள்.
முக்கி குறிப்பு: உங்களுக்கு இருக்கும் இந்த பிரச்சனையை தாமதிக்காமல் உடனே செக்ஸ் தெரபிஸ்டை பாருங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D