உடல் எடை குறைப்பது முதல் இதய ஆரோக்கியம் வரை என ஆப்ரிகாட் பழம் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். உலர் ஆப்ரிகாட் பழத்தின் நன்மைகளைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
ஆப்ரிகாட் (Apricots) என்ற பழம் தமிழில் பாதாமி பழம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பழம் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். மேலும், இந்த பழம் நம்மை ஆரோக்கியமாக வைக்கவும், பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கவும் உதவுகிறது. இந்த உலர் ஆப்ரிகாட் பழம் சாப்பிட்டால் நம் உடலுக்கு ஏராளமான சத்துக்கள் கிடைக்கும் தெரியுமா..?
ஏனெனில், இதில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது தவிர, இதில் கரோட்டினாய்டுகள் போன்ற பைட்டோ கெமிக்கல்களும் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே, உலர் ஆப்ரிகாட்
பழம் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இந்த கட்டுரையில் நான் தெரிந்து கொள்ளலாம்.
undefined
உலர் ஆப்ரிகாட் பழத்தின் நன்மைகள்:
1. உடல் எடையை குறைக்க உதவுகிறது:
இன்றைய காலத்தில் உடல் பருமன் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இதற்காக பெரும்பாலானோர் பலவிதமான முயற்சிகளை செய்து வருகிறார்கள். ஆனால், எந்தவித கஷ்டமுமின்றி உடல் எடையை குறைக்க விரும்பினால், உலர் ஆப்ரிகாட் பழம் உங்களுக்கு நிச்சயம் உதவும். ஆம், இந்த பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது நீண்ட நேரம் உங்கள் பசி உணர்வை கட்டுப்படுத்தும் மற்றும் நீங்கள் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் சுலபமாக எடையை குறைக்கலாம்.
2. இரத்த சோகையை தடுக்கும்:
உலர் ஆப்ரிகாட் பழம் உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்ய உதவுகிறது. மேலும், இது இரத்த சோகைப் பிரச்சனையையும் தடுக்கிறது. இந்தப் பழம் சாப்பிட்டால் உடலில் ஹீமோகுளோபின் அதிகரித்து இரத்த சோகை தடுக்கப்படுகிறது.
3. செரிமான அமைப்பு ஆரோக்கியமாக வைக்கும்:
உலர் ஆப்ரிகாட் பழத்தில் நார்ச்சத்து அதிகமாகவே உள்ளது. இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும், இதில் இருக்கும் நுகர்வு உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை எளிதில் நீங்கும். எனவே, மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், இந்த பழம் சாப்பிடுவது ரொம்பவே நல்லது. அதுபோல, வயிறு ஆரோக்கியமாக இருக்க, தினமும் இந்த பழம் சாப்பிடலாம்.
4. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது:
சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பழம் மிகவும் நன்மை பயக்கும். இதனை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். எனவே, சர்க்கரை நோயாளிகள் தவறாமல் இந்த பழத்தை சாப்பிடுங்கள்.
5. கண் ஆரோக்கியத்திற்கு நல்லது:
ஆப்ரிகாட் பழத்தில் வைட்டமின் ஏ ஏராளமாகவே உள்ளது. இது கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். எனவே, இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் கண் பார்வை அதிகரித்து, கண்புரை பிரச்சனையைத் தவிர்க்கலாம்.
6. இதய ஆரோக்கியத்திற்கு நல்லது:
பீட்டா கரோடின் மற்றும் வைட்டமின் ஏ, சி, இ போன்ற பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இந்த பழத்தில் உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும், இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும். இது மாரடைப்பு அபாயத்தை குறைக்க உதவுகிறது.
7. வளர்சிதை மாற்றம் நன்றாக இருக்கும்:
ஆப்ரிகாட் பழம் சாப்பிட்டு வந்தால் வளர்ச்சிதை மாற்றத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஏனெனில், இதில் பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை ஏராளமாகவே உள்ளது. எனவே, இவற்றை சாப்பிடுவதன் மூலம் வளர்ச்சிதை மாற்றம் வேகமாகவும், உடல் சுறுசுறுப்பாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.