Peeing After Sex For Women : உடலுறவுக்கு முன்னும் பின்னும் பெண்கள் கண்டிப்பாக சிறுநீர் கழிப்பது மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் சொல்லுகிறார்கள். அது ஏன் என்று இப்போது இங்கு பார்க்கலாம்.
கணவன் மனைவி உறவில் செக்ஸ் மிகவும் அவசியம். ஆனால், இந்த விஷயத்தில் மிகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் உடலுறவு கொள்ளும் போது பெரும்பாலும் பாலியல் பரவும் நோய்கள் மற்றும் பிற வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்களின் அபாயத்தை அதிகரிக்க செய்யும். பொதுவாகவே, செக்ஸ் மற்றும் பாலியல் ஆரோக்கியத்தை சுற்றி பல உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகள் மக்கள் மத்தியில் உள்ளது. அவற்றில் ஒன்றுதான் உடலுறவுக்கு முன்னும் பின்னும் சிறுநீர் கழிக்க வேண்டும். அதுவும் குறிப்பாக, பெண்கள் தான். ஆனால், அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? இப்போது அது குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.
உடலுறவுக்கு பிறகு ஏன் சிறுநீர் கழிக்க வேண்டும்?:
உடலுறவில் ஈடுபடும்போது பெண்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. அத்தகைய, ஒரு தொற்று தான் சிறுநீர்ப்பாதை தொற்றாகும். இந்த தொற்று பாலில் ரீதியாக பரவுவதில்லை. ஆனால், உடலுறவின் மூலம் தூண்ட படலாம் என்று நிபுணர்கள் சொல்லுகிறார்கள்.
UTI என்பது சிறுநீரகங்கள், சிறுநீர்குழாய், சிறுநீர் பை மற்றும் சிறுநீர் குழாய் உட்பட்ட சிறுநீர் அமைப்பின் எந்த பகுதியையும் பாதிக்கும் ஒரு தொற்றாகும். பாக்டீரியாக்கள் தோல் மற்றும் மலக்குடலில் இருந்து சிறுநீர் பாதையில் நுழையும் போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
உங்களுக்கு தெரியுமா.. உடலுறவில் ஈடுபடும் போது சிறுநீர்ப்பையில் சிறுநீரில் இருந்தால், நீங்கள் உடலுறவு பிறகு சில மணி நேரத்திற்குள்ளே சிறுநீர் கழிக்காமல் இருந்தால், உள்ளே தள்ளப்படும் இந்த பாக்டீரியாக்கள் வளர்ந்து விடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதனால்தான் உடலுறவுக்கு பிறகு கண்டிப்பாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இதையும் படிங்க: மனைவிக்கு செக்ஸில் ஆர்வம் வராததற்கு இதுதாங்க காரணம்.. உடனே சரி செய்ங்க..
உடலுறவுக்கு முன் ஏன் சிறுநீர் கழிக்க வேண்டும்?:
பொதுவாகவே, பல பெண்கள் உடலுறவுக்கு முன் சிறுநீர் கழிக்கிறார்கள். ஏனெனில், நீண்ட நேரம் செக்ஸில் ஈடுபடும் போது, இன்பத்தின் உச்சத்தை அடைவதில் கிளைமாக்ஸ் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இதற்கு முதலில் சிறுநீர்ப்பையை காலி செய்து விட வேண்டும். அப்போதுதான் உச்சத்தை முழுமையாக அனுபவிக்க முடியும். இல்லையெனில். உடலுறவின் போது நீங்கள் சங்கடமாக உணரலாம்.
உடலுறவுக்கு பிறகு உடனே செல்ல வேண்டுமா?:
தற்போதைக்கு உடலுறவுக்கு எவ்வளவு நேரம் கழித்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்று எந்த ஆய்வும் இல்லை. ஆனால், நீங்கள் நீண்ட நேரம் கழிக்காமல் இருக்கக் கூடாது. பொதுவாகவே, உடலுறவு பிறகு சிறுநீர் கழிப்பது கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை வெளியேற்றி, சிறுநீர் பாதையை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஆனால், இது வெளிப்புறத்திற்கும் சிறுநீர்ப்பைக்கும் இடையே உள்ள குழாய் எவ்வளவு குறுகியதாக இருக்கிறது என்பதை பொறுத்துதான்.
இதையும் படிங்க: உடலுறவுக்குப் பிறகு பிறப்புறுப்பு வீக்கத்திற்கு இதுதான் காரணம்.. முழுவிவரம் இதோ!
ஆண்களை விட பெண்களுக்கு தான் UTIகள் அதிகம்.. அது ஏன்?
பெண்களுக்கு சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர் குழாய் ஆனது ஆண்களை விட குறைவாகவே இருக்கிறது இதனால் தான் அவர்களுக்கு UTIகள் அதிகம் காணப்படுகிறது. இதனால் பாக்டீரியாக்கள் சிறுநீர்ப்பைக்குள் எளிதாக செல்லும். மேலும், இது தொற்று நோய்க்கும் வழி வகுக்கும்.
அடிக்கடி சிறுநீர்ப்பாதை தொற்று இருப்பது?
பொதுவாகவே சிலருக்கு அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இதற்கு செக்ஸ் தான் மிகப்பெரிய ஆபத்து காரணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. முக்கியமாக, நீங்கள் ஒவ்வொரு முறையும் உடலுறவு இந்த பிரச்சனையை எதிர்கொண்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில், விளைவுகள் மோசமாகலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D