கேரளாவில் ஒரு பண்ணையில் கோழிகள் இடும் முட்டையில் மஞ்சள் கருவின் நிறம் பச்சையாக உள்ளது.
கேரளாவின் மலப்புரத்தில் உள்ள ஒரு பண்ணையில் கோழிகள் இடும் முட்டைகளின் மஞ்சள் கரு பச்சை நிறத்தில் உள்ளன. அதாவது, முட்டைகள் மஞ்சள் கருவுக்குப் பதில் பச்சை கருவுடன் இருக்கின்றன.
அந்த விநோத கோழிகளை வளர்க்கும் பண்ணையின் உரிமையாளர் ஏ. கே. ஷிஹாபுதீன், அசாதாரணமான பச்சைக்கரு முட்டைகளின் படங்கள் மற்றும் வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார். அது இப்போது பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.
Mangaluru Leopard: கிணற்றில் விழுந்த சிறுத்தையைக் காப்பாற்றிய பெண் மருத்துவர்
அந்தக் கோழிகளுக்கு அளிக்கப்பட்ட தீவனம் இந்த மாற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம் வேறு தையும் அவை உட்கொண்டிருக்கலாம் என கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக வல்லுநர்கள் கூறுகின்றனர். பண்ணைக்குச் சென்று ஆய்வுக்காக அவற்றின் மாதிரிகளையும் சேகரித்துள்ளனர்.
கோழிப்பண்ணை அறிவியல் துறையின் உதவிப் பேராசிரியர் டாக்டர் எஸ். சங்கரலிங்கம், “முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள பச்சை நிறம் எந்த மரபணுக் கோளாறாலும் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கிறார்.
கோழிகளுக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து தீவனம் வழங்கப்பட்டது. அதைச் சாப்பிட்ட இரண்டு வாரங்களில் கோழிகள் பச்சை நிற மஞ்சள் கருவுடன் முட்டைகள் இட ஆரம்பித்துள்ளன.
அந்தத் தீவனத்தை உட்கொண்டதுதான் நிற மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. பண்ணை உரிமையாளர் ஷிஹாபுதீனும் கோழிகளுக்கு விசேஷமாக எதையும் கொடுக்கவில்லை என்று சொல்கிறார்.
“கோழிகளின் கொழுப்பு படிவுகளில் பச்சை நிறமி இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ததால், அது ‘கொழுப்பில் கரையக்கூடியதாக’ இருக்க வேண்டும்” என்று டாக்டர் சங்கரலிங்கம் கூறுகிறார். சித்தாமுட்டி போன்ற மூலிகைத் தாவரங்களை உட்கொள்வதும் நிறமாற்றத்துக்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
வாஸ்துப்படி வீட்டில் தொலைக்காட்சியை இங்கு தான் வைக்க வேண்டும்..!!