காதலை வெளிப்படுத்திய பிறகும், தன்னுடைய காதலன் தன்னை நிஜமாகவே காதலிக்கின்றானா என்கிற சந்தேகம் பெண்கள் பலரிடம் இருக்கிறது. அந்தவகையில் ஒரு ஆணுக்குள் இருக்கும் தீவிரமான காதலை பெண்கள் எப்படி கண்டறியலாம் என்பதை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
காதலனின் காதலை ஏற்றுக்கொண்டதில் இருந்து, அந்த காதல் தொடரும் வரை பெண்களுக்கு சந்தேகம் இருக்கும். தனது காதலனை தன்னை நிஜமாகவே காதலிக்கின்றானா என்கிற கேள்வி ஒவ்வொரு காதலிகளுக்குள்ளும் இருக்கும். ஆனால் இதை காதல் தொடங்கிய உடனே எல்லாம் கண்டுப்பிடிக்க முடியாது. அதற்கு சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம். அப்போதும் பெண்களாகிய உங்களுக்கு உங்கள் காதலனின் காதல் மீது சந்தேகம் இருந்தால், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஆண் தன் காதலை தீவிரமாக உணரவில்லை என்பதை சில அறிகுறிகள் கொண்டு தெரிந்துகொள்ளலாம். அது என்னென்ன? என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
காதலில் தோழமை
undefined
காதலனும் காதலியும் காதலித்து வந்தாலும், அவர்களுக்கிடையே நல்ல நட்பு இருக்கும். இதற்கு காரணம் காதலன் தனது காதலியை தோழி போல நடத்துவது தான். நண்பர்களுடன் வெளியே போவது, கேளிக்கை விருந்துகளுக்கு செல்வது என காதலியின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு காதலன் தடை சொல்ல மாட்டார்கள். எப்போதும் இயல்பாகவும், அதேபோல காதலியின் குடும்பத்தினரை தன் குடும்பமாக நினைத்து நட்பாக பழகுவார்கள்.
ரசிப்பு இருக்கும்
காதலியின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் காதலன் ரசிப்பார்கள். காதலி தங்களிடம் பேசுவது, சண்டைப் பிடிப்பது, கொஞ்சுவது போன்ற எல்லாவிதமான செயல்பாடுகளிலும் காதலனின் ரசனை இருக்கும். ஒரு உண்மையான காதல் இருக்கும் இடத்தில், காதலி பேசுவதைக் கேட்டு காதலன் எரிச்சலடைய மாட்டார். அளவுக்கு அதிகமாக நேசிப்பவருக்கு, தனது காதலியின் பேச்சு மற்றும் செயல்பாடு என்றும் அலுத்துப் போகச் செய்யாது.
உறவில் நேர்மை
உள்ளன்புடன் நேசிக்கும் ஒருவர், ஒருபோதும் காதலியிடம் எதையும் மறைப்பதில்லை. தன்னை குறித்த அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பேசிவிடுவார். தவறு தன் பக்கம் இருந்தாலும், அதற்கு காதலியிடம் மன்னிப்புக் கோருவார். ஒருவேளை அந்த தவறு காதலி பக்கம் இருந்தாலும், அதற்கும் அவர் தான் மன்னிப்புக் கோருவார். அவருடைய ஒவ்வொரு அசைவிலும் இந்த காதல் உறவின் மீது, அவர் கொண்டிருக்கும் ஆசை, அன்பு மற்றும் விருப்பம் போன்றவை வெளிப்படையாக தெரியும்.
தீண்டல் இன்பம்
காதலியை சாதாரணமாக தொட்டு பேசுவதற்குக் கூட அவரிடம் கூச்சம் இருக்கும். ஆனால் காதலியின் ஸ்பரிசத்தை தீண்டுவதற்கு பல மாதங்களாக காத்துக் கிடப்பார். ஒருவேளை அவருடைய ஆசை நிறைவேறி உங்களை தீண்டினால், அந்த ஸ்பரிசம் ஒருவித நம்பிக்கையை தரும். மற்றும் எந்தவிதமான பதட்டமும் அச்சமும் அதனால் உருவாகாவது.
ஒத்துழைக்கும் குணம்
காதலியாகவே இருந்தாலும், தனது வாழ்க்கை சார்ந்த முக்கிய முடிவுகளுக்கு உங்களிடம் வந்து ஆலோசனை கேட்பார். ஒருவேளை தனது செயல்பாட்டில் நம்பிக்கை இல்லாமல் போனால், காதலியின் சொல் கேட்டு நடப்பார். எப்போதும் உங்களுடைய ஒத்துழைப்புக்காக காத்திருக்கும் நபராக அவர் இருப்பார். எல்லாவற்றுக்கும் மேலாக காதலின் மீதும் காதலியின் மீதும் அவருக்கு அன்பு, பொறுமை மற்றும் ஒத்துழைப்பு நிறையவே இருக்கும்.