கர்மாவின் வினை தான் கொரோனா... புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் புது வரவு..!!

Published : Mar 20, 2020, 12:03 AM IST
கர்மாவின் வினை தான் கொரோனா... புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் புது வரவு..!!

சுருக்கம்

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி டுவிட்டரில் வரைபடம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். 

T.Balamurukan

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதன் தாக்கத்தை அதிகப்படுத்தி போய்க்கொண்டிருக்கிறது.   இந்த நோய் தொற்றிலிருந்து விடுபடுவதற்கான உரிய மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அதன் பாதிப்புகள் மற்றும் பலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  உலக அளவில் இன்றுவரை 2 லட்சத்து 18 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி டுவிட்டரில் வரைபடம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.  அதில், மனிதர்கள் முக கவசம் அணிந்து கொண்டு கைகளை கட்டியபடி கூண்டுக்குள் அடைப்பட்டு நிற்கிறார்கள். அவர்களை சுற்றிலும், விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளிட்டவை வெளியே சுதந்திரமாக இருக்கின்றன.அதன் கீழே இது கொரோனா அல்ல கர்மா என பதிவிட்டுள்ளார்.  நாம் யாரை உட்கொள்கிறோம் என்ற பொறுப்பை ஏற்று கொள்கிறோமா? என்றும், இது தீங்கில்லா உணவை தேர்வு செய்யும் வழக்கம் பற்றிய விசயமும் ஆகும் என்றும், அதில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அதில், அகிம்சையை நாம் பயிற்சி செய்கிறோமா? வார்த்தையில் மட்டுமில்லாமல் செயலிலும், உணவிலும் அகிம்சை இருக்க வேண்டும் என்றும் கிரண்பேடி பதிவிட்டுள்ளார்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Exercises For Joint Pain : மூட்டு வலி அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி!! ஒரே வாரத்தில் நிவாரணம்; ஒரே ஒரு பயிற்சி போதும்
முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்