128 ஆண்டுகளுக்கு பிறகு ஏழுமலையானுக்கு வந்த 'கொரோனா' வடிவில் வந்த சோதனை.!!

By Thiraviaraj RMFirst Published Mar 19, 2020, 11:37 PM IST
Highlights

ஊருக்கே படியளக்கும் பகவான் ஏழுமலையானையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய கோயிகள் அனைத்தையும் மூடும் அளவிற்கு கொரோனா தன் கட்டுபாட்டிற்குள் கடவுளையும் கொண்டுவந்து விட்டது.அந்த அளவிற்கு சக்திவாய்ந்ததாக கொரோனா விளங்குகிறது.

T.Balamurukan

ஊருக்கே படியளக்கும் பகவான் ஏழுமலையானையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய கோயிகள் அனைத்தையும் மூடும் அளவிற்கு கொரோனா தன் கட்டுபாட்டிற்குள் கடவுளையும் கொண்டுவந்து விட்டது.அந்த அளவிற்கு சக்திவாய்ந்ததாக கொரோனா விளங்குகிறது.

 ஆந்திரமாநிலம், திருமலையில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த பக்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று தேவஸ்தான அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அதனால் இந்த தொற்று பரவாமல் தடுக்க ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கும் அனுமதியை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்திருக்கிறது. ஆந்திர அரசிடம் இதுகுறித்து கலந்து ஆலோசனை நடத்தியதில், திருமலை ஏழுமலையான் கோயிலை ஒருவாரம் மூட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

தற்போது திருமலையில் 18 ஆயிரம் பக்தர்கள் உள்ளனர். ஒரு மணிநேரத்திற்கு 4 ஆயிரம் பக்தர்கள் என தரிசனத்திற்கு அனுமதித்து  வெள்ளி காலை ஆர்ஜித சேவா டிக்கெட் பெற்ற பக்தர்களை மட்டும் தரிசனத்திற்கு அனுமதித்த பின், கோயிலில் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட உள்ளது. ஒரு வாரத்திற்கு பின் கொரோனா தொற்றின் வேகம் குறையத் தொடங்கிய பின் பக்தர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது. இல்லாதபட்சத்தில் தொற்றின் வேகம் அதிகரிக்கும் நிலையில் இந்த அனுமதி மறுப்பு வரும் மார்ச்.31ம் தேதி வரை நீடிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

திருமலை மட்டுமல்லாமல் திருப்பதி மற்றும் திருச்சானூரில் உள்ள தேவஸ்தானத்திற்கு சம்மந்தப்பட்ட கோயில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 1892ம் ஆண்டிற்கு பின் தற்போது 128 ஆண்டுகள் முன்பு இதுபோன்ற சம்பவம் நடைபெற்ற போது ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மீண்டும் தற்போது அதே போன்ற நிலை ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!