காரசாரமான ஐயங்கார் வீட்டு ஸ்டைல் புளியோதரை பொடி...நம்ம வீட்டிலும் செய்யலாம்

Published : Apr 17, 2025, 04:12 PM IST
காரசாரமான ஐயங்கார் வீட்டு ஸ்டைல் புளியோதரை பொடி...நம்ம வீட்டிலும் செய்யலாம்

சுருக்கம்

கோவில் பிரசாதங்களிலும், வெரைட்டி ரைஸ்களில் புளியோதரைக்கு தனி இடம் உண்டு. அதுவும் ஐயங்கார் வீட்டு புளியோதரையை அடித்துக் கொள்ள முடியாது. ரகசியமான ஐயங்கார் வீட்டு புளியோதரை பொடியை எப்படி வீட்டில் தயாரிப்பது என்ற ரகசியத்தை வாங்க தெரிந்து கொள்ளலாம்.

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் விரும்பப்படும் உணவு வகைகளில் ஒன்று புளியோதரை ஆகும். குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில், ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொருவரின் கைமணத்திற்கேற்ப இதன் சுவை மாறுபடும். ஆனால் ஐயங்கார் வீட்டு முறை புளியோதரை அதன் தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்திற்காக மிகவும் பிரபலமானது. எனவே இன்று ஐயங்கார் வீட்டு முறைபடி  புளியோதரை பொடி தயார் செய்து அதன் பாரம்பரிய சுவையை உங்கள் வீட்டிலேயே கொண்டுவரலாம். 

புளியோதரை பொடிக்கு தேவையான பொருட்கள்:

தனியா (Coriander seeds) - 2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு (Chana dal) - 1/4  கப்
உளுத்தம் பருப்பு (Urad dal) - 1/4  கப்
நிலைக்கடலை  -  1/4  கப்
எள் (Sesame seeds) - 2 டீஸ்பூன்
மிளகு (Black peppercorns) - 1 டீஸ்பூன்
வெந்தயம் (Fenugreek seeds) - ¼ டீஸ்பூன்
மிளகாய் வற்றல் (Dry red chillies) - 6-8 (உங்கள் காரத்திற்கு ஏற்ப)
பெருங்காயம் (Asafoetida) - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் (Turmeric powder) - ½ டீஸ்பூன் (விரும்பினால்)
கறிவேப்பிலை (Curry leaves) - ஒரு கொத்து
கல் உப்பு - தேவையான அளவு
புளி - 1 கப்

மேலும் படிக்க: தினமும் ரசம் சாப்பிட்டு போர் அடிக்குதா? கர்நாடகா ஸ்டைல் திலி சாறு செஞ்சு பாருங்க

புளியோதரை பொடி செய்முறை: வறுத்தல் (Roasting):

ஒரு வாணலியை மிதமான தீயில் சூடாக்கவும், முதலில்  கடலை பருப்பு,  உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நிறம் மாறி நல்ல மணம் வரும் வரை வறுக்கவும். தனியா, வெந்தயம்  மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும், இறுதியாக எள்ளைச் சேர்த்து லேசாக வெடிக்கும் வரை வறுக்கவும். விரும்பினால், கறிவேப்பிலையையும் தனியாக லேசாக வறுத்துக்கொள்ளலாம். இது பொடியில் நல்ல மணம் கொடுக்கும்.

பின்னர் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மிளகாய் வற்றல் மற்றும் கல் உப்பு தேவையான அளவு சேர்த்து லேசாக சூடாகும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின்னர் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து 1/4  டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும் (விரும்பினால்)  மற்றும் 1 கப் புளி சேர்த்து ஈரப்பதம் போகும் வரை வதக்கவும் வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.

வறுக்கும்போது கவனம்: பொருட்களை வறுக்கும்போது தீயை மிதமாக வைக்கவும். கருகினால் பொடியின் சுவை மாறிவிடும்.

பொடி செய்தல் (Grinding):

வறுத்த பொருட்கள் முற்றிலும் ஆறியவுடன், மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பொடித்துக்கொள்ளவும். பொடி செய்யும் போது பெருங்காயத்தையும், விரும்பினால் மஞ்சள் தூளையும் சேர்த்து பொடித்துக்கொள்ளவும். நன்கு பொடியானதும், காற்றுப்புகாத டப்பாவில் போட்டு அறை வெப்பநிலையில் அல்லது குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கலாம். இந்த பொடியை பல வாரங்களுக்கு பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க: கொய்யா பழத்தை வைத்து சுவையான சட்னி...வித்தியாசமா இப்படி செய்து பாருங்க

புளியோதரை தாளிதம் மற்றும் கலவை:

புளியோதரை சாதம் செய்யும் போது எண்ணெய்,கடுகு,உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு, கறிவேப்பிலை, மிளகாய், நிலக்கடலை போட்டு வதக்கி பின்னர் சாதம் சேர்க்கவும். வறுத்த  புளியோதரை பொடியில் 3 டீஸ்பூன் சேர்த்து நன்கு கலக்கவும் தேவைப்பட்டால் உப்பு சேர்த்து பரிமாறவும், இப்போது காரசாரமான ஐயங்கார் புளியோதரை ரெடி.

உதிரியான சாதம்: புளியோதரைக்கு சாதம் உதிரியாக இருக்க வேண்டும். குக்கரில் சமைக்கும்போது குறைவான தண்ணீர் சேர்த்து சமைக்கவும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Bread Omelette for Breakfast : காலை உணவாக பிரட் ஆம்லெட் சாப்பிட்டுறது நல்லதா? தொடர்ந்து சாப்பிடுவறங்க இதை கவனிங்க
Push-Ups : இந்த '1' உடற்பயிற்சியை தினமும் காலைல பண்ணாலே 'உடலில்' பல மாற்றங்கள் வரும்