Warm Salt Water Benefits : தினமும் காலை வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து குடித்தால் உடலில் பல பிரச்சனைகள் நீங்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நம் பல விஷயங்களை செய்கிறோம். மேலும், உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதற்கு தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். இதன் மூலம் பல நோய்களை நாம் தவிர்க்கலாம்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் பல பிரச்சினைகள் நீங்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், அதில் ஒரு சிட்டிகை உப்பை கலந்து குடித்தால் பல நோய்களுக்கு அது அருமருந்தாக செயல்படும் என்று உங்களுக்கு தெரியுமா? எனவே, சற்றும் தாமதிக்காமல் உப்பு கலந்த சூடானநீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து இப்போது இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: தினமும் காலை 5 மணி எழுந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா..?
சூடான நீரில் உப்பு கலந்த குடித்தால் கிடைக்கும் நன்மைகள்:
1. உடலை நீரேற்றமாக வைக்கும்:
தினமும் காலை உப்பு கலந்த சூடான நீரை குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். இந்த நீர் உடலை நீரேற்றமாகவும் வைத்திருக்கும். உங்களுக்கு தெரியுமா.. இந்த நீரில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. இவை உடலில் சரியான எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.
2. எலும்புகளுக்கு நல்லது:
மூட்டு வலி பிரச்சனைகள் அவதிப்படுபவர்களுக்கு இந்த உப்பு நீர் மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில், இதில் கால்சியம் உள்ளது. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், இந்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால் தசைகளும் ஆரோக்கியமாக இருக்கும்.
இதையும் படிங்க: நீங்கள் ஆரோக்கியமாக வாழ விரும்புகிறீர்களா...? அப்ப இன்று முதல் 'இதை' செய்ய தொடங்குங்கள்..!
3. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:
உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து குடிங்கள். அது உங்களுக்கு அருமருந்தாக செயல்படும். இந்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால் மலம் வெளியேறும் செயல்முறை எளிதாகும். மேலும், இது உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கும் மற்றும் வயிற்றில் pH அளவையும் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.
4. உடலை நச்சு நீக்கும்:
தினமும் காலை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும். அதுமட்டுமின்றி, இது பல நோய்களையும் தவிர்க்க முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர, சிறுநீரகம் மற்றும் கல்லீரலையும் இந்த நீர் ஆரோக்கியமாக வைக்கும். பல நோய்களிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாக்க விரும்பினால், தினமும் இந்த நீரை குடியுங்கள்.
5. சருமத்திற்கு நன்மை பயக்கும்:
இந்த உப்பு நீர் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் தெரியுமா? இந்த உப்பு நீரை குடிப்பதன் மூலம் சருமம் தொடர்பான பல பிரச்சினைகளை நீங்கள் தவிர்க்கலாம். இதை நீங்கள் தினமும் குடித்து வந்தால் முகப்பருக்கள், தடிப்பு தோல், அலர்ஜி மற்றும் அரிக்கும் தோல் அலர்ஜியின் அறிகுறிகளையும் இந்த நீர் குறைக்க உதவுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D