
தற்போது கோடை காலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மழைக்காலம் மனதிற்கு அமைதியை கொடுப்பது மட்டுமின்றி, சுற்றுப்புற சூழ்நிலை இடமாகவும் குளிர்ச்சியாகவும் மாற்றுகிறது.
மேலும் இந்த பருவத்தில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு மிக அதிகமாக இருப்பதால், உடலில் ஒட்டும் தன்மை உணரப்படுகிறது மற்றும் வீடுகளுக்குள்ளும் ஒருவித ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். இதனால் பலர் தங்களது வீடுகளில் ஏசியை பயன்படுத்துகிறார்கள். ஆனால், இப்போது ஒரு கேள்வி எழுகிறது. அதாவது, மழை காலத்தில் ஏசி பயன்படுத்தலாமா? அப்படி பயன்படுத்தினால் ஏசியின் வெப்பநிலை என்னவாக வைக்க வேண்டும்? இது போன்ற கேள்விக்கான பதிலை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
மழை காலத்தில் ஏசியை பயன்படுத்தலாமா?
மழை காலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் ஏசியை பயன்படுத்தினால் எந்த தவறும் இல்லை. மேலும், நீங்கள் ஈரப்பதத்தை குறைக்க ஏசியை cool mode - க்கு பதிலாக dry mode - யில் பயன்படுத்துவது மிகவும் நல்லது. இப்படி வைப்பது மூலம் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை நீக்கி, அறையின் வெப்பநிலையை பராமரிக்கும். மேலும், மழை குறைவாக பெய்யும் போதும், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இல்லாமல் இருக்கும் சமயத்தில் நீங்கள் உங்கள் ஏசியை cool mode - ல் வைத்து பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: Asthma Patients in AC : ஆஸ்துமா நோயாளிகளே! இந்த விஷயம் தெரியாம ஏசியில இருக்காதீங்க.! இல்லையெனில் ஆபத்து..
மழை காலத்தில் ஏசியின் வெப்பநிலை என்னவாக இருக்க வேண்டும்?
மழைக்காலத்தில் காற்று குளிர்ச்சியாக இருப்பதால் ஏசியின் வெப்பநிலையை மிகவும் குறைவாக வைக்கும் போது அறை மிகவும் கூலாக இருக்கும். இதனால் பல உடல் உள்ள பிரச்சனைகள் ஏற்படும். எனவே, ஏசியின் வெப்பநிலை 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வேண்டும். இரவில் கூட நீங்கள் ஏசியை பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: எச்சரிக்கை: வெடிக்கும் ஏசி, பிரிட்ஜ்.. தவிர்க்க சில வழிகள் இதோ..!
பில்டரை சுத்தமாக வைக்கவும்:
ஏசியின் பில்டரை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள். இதனால் ஏசியின் செயல் திறன் நன்றாக இருக்கும் மற்றும் அறையில் காற்றும் சுத்தமாக வைத்திருக்கும்.
ஜன்னலை திறந்து வைக்கவும்:
ஏசி இருக்கும் ரூமில் காற்று சுழற்சி பராமரிப்பது மிகவும் அவசியம். எனவே, புதிய காற்று உள்ளே வர, சிறிது நேரம் ஜன்னலை திறந்து வையுங்கள்.
ஏசியை தேவைக்கேற்ப பயன்படுத்துங்கள்:
ஏசியை நாள் முழுவதும் பயன்படுத்தக் கூடாது. எனவே, அதை அவ்வப்போது ஆன் செய்துவிட்டு, உங்களது தேவைக்கேற்ப மட்டும் அதை பயன்படுத்துங்கள். இதனால் மின்சார செலவு உங்களுக்கு மிச்சமாகும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.