குக்கரில் விசில் அடிக்கும் போது தண்ணீர் லீக் ஆகுதா? அப்ப 'இத' மட்டும் தெரிஞ்சு வச்சுக்கோங்க இனி எப்பவும் வராது

By Kalai Selvi  |  First Published Jul 18, 2024, 9:59 AM IST

Cooker Water Leakage Problem : விசில் அடிக்கும் போது குக்கரில் இருந்து தண்ணீர் வர ஆரம்பித்தால் என்ன செய்யலாம் என்பதை பற்றியும், அதற்கான தீர்வையும் இப்போது இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.


அந்த காலத்தில் அரிசி பருப்பை வேக பானையில் தான் வேக வைத்து சமைப்பார்கள். ஆனால், தற்போது காலம் நவீனமாகிவிட்டதால், காலத்திற்கு ஏற்ப சமைக்கும் முறையும் மாறிவிட்டது. ஆம், இன்றைய காலத்தில் எல்லாருடைய வீடுகளிலும்  பிரஷர் குக்கர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அரிசி பருப்பு முதல் காய்கறிகள் வேக வைப்பது, உணவு சமைப்பது வரை என அனைத்தும் பிரஷர் குக்கரில் தான் செய்கிறார்கள். இதன் மூலம் கேஸ் சேமிப்பதைத் தவிர, சுவை மற்றும் ஆரோக்கியத்திற்கான ஒரு சிறந்த சமையல் நுட்பம் ஆகும்.

ஆனால், பல சமயங்களில் பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது சில பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி உள்ளது. அதாவது, சில சமயங்களில் விசில் அடிக்காது, சில சமயம் உணவு அதிகமாக வெந்துவிடும், மேலும் சில சமயத்தில் குக்கரில் இருந்து விசில் அடிக்கும் போது தண்ணீர் வெளியே வந்துவிடும். குக்கரில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால் கேஸ் அடுப்பு முழுவதும் அழுக்காகிவிடுகிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  Kitchen Tips : இல்லத்தரசிகளே அவசியம் இந்த 7 கிச்சன் டிப்ஸ தெரிஞ்சு வச்சுக்கோங்க..   

உண்மையில், குக்கரில் உணவு மிகவும் சீக்கிரமாக சமைக்கப்படுகிறது. ஆனால், இது போன்ற பிரச்சனைகளும் நேரிடுவதால் குக்கரையும் கேஸ் அடுப்பையும் சுத்தம் செய்வதில் சிரமமாகிறது மற்றும் அதிக நேரமும் விரயமாகிறது. எனவே, விசில் அடிக்கும் போது குக்கரில் இருந்து தண்ணீர் வர ஆரம்பித்தால் என்ன செய்யலாம் என்பதை பற்றியும், அதற்கான தீர்வையும் இப்போது இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

இதையும் படிங்க:  கேஸ் சிலிண்டரை இப்படி யூஸ் பண்ணுங்க.. நீண்ட நாள் சேமிக்கலாம்..!

குக்கரை இப்படி பயன்படுத்துங்கள் இனி விசில் அடிக்கும் போது தண்ணீர் வராது:

1. தண்ணீர் அதிகம் வைக்க கூடாது:
குக்கரில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வைத்தால் நெருப்பு அதிகமாகிய உடன் அது அழுத்தத்துடன் விசில் அடிக்க தொடங்கும். இதனால் தண்ணீரும் வெளியே வர ஆரம்பிக்கும். எனவே, எப்போதும் சரியான அளவில் மட்டுமே தண்ணீர் வைக்கவும்.

2. அதிக தீயில் வைக்காதே:
குக்கரில் அரிசி பருப்பு சமைக்கும்போது அடுப்பை அதிக தீயில் வைத்தால் குக்கரில் இருந்து விசில் வரக்கூடும். இதனால் தண்ணீரும் வெளியே கொட்டும். எனவே, நீங்கள் நடுத்தர அளவில் வைத்து சமைக்கவும்.

3. விசிலை சுத்தமாக வையுங்கள்:
உங்கள் குக்கரின் திசையில் அழுக்கு படிந்து இருந்தால் குக்கரில் விசில் அடிக்காது. ஆனால், தண்ணீர் வெளியே கொட்டும். எனவே, விசிலை அவ்வப்போது சுத்தம் செய்வது மிகவும் அவசியம்.

4. ரப்பரை சரிபார்க்கவும்:
பல சமயம் நாம் ஒரு குக்கரின் ரப்பரை வேறு குக்கரில் மாற்றுவோம். சில சமயம் அது தேய்ந்தும், அழுக்குகள் நிறைந்தும் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், கூட குக்கரில் இருந்து தண்ணீர் வெளியே வர தொடங்கும். எனவே, பயன்படுத்துவதற்கு முன் நீங்கள் அதை சரிபார்ப்பது மிகவும் அவசியம்.

5. குக்கர் மூடி சேதமடைந்திருந்தால்:
பழையதாக இருந்தாலும் அல்லது அதன் மூடி பலமுறை கீழே விழுந்து சேதமடைந்து இருந்தாலும் அதிலிருந்து பிரஷர் கசியும். மேலும் இத்தகைய சூழ்நிலையில் கூட தண்ணீர் வெளியேறும். எனவே, இதுமாதிரி நடந்தால் உடனே மூடியை சரி பார்க்கவும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!