தினமும் காலை வெறும் வயிற்றில் துளசி இலைகள், கருப்பு மிளகு, தேன் ஆகியவற்றில் தயாரித்த மருந்தை சாப்பிட்டால் சளி, இருமல், தொண்டை வலி உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
பொதுவாகவே, மழைக்காலம் தொடங்கியவுடன் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு சளி, இருமல் காய்ச்சல் வருவது வழக்கம். இதனால் வீட்டில் இருக்கும் பாட்டி நாட்டு வைத்திய முறையை பின்பற்றி ஏதாவது ஒரு கசாயத்தை செய்து குடிக்க கொடுப்பார்கள். அது குடித்த ஓரிரு நாட்களிலே குழந்தைகளும் குணமாகி விடுவார்கள். அந்த வகையில், துளசி இலை, கருப்பும் மிளகு மற்றும் தேன் ஆகியவை மருத்துவ குணங்கள் நிறைந்தது என்று நாம் அனைவரும் அறிந்ததே. பலரது வீடுகளில் பல நூற்றாண்டுகளாக இவை மூன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, இந்த மூன்றையும் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பது குறித்து இப்போது இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
துளசி இலையின் நன்மைகள்:
துளசி இலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து நம்மை பாதுகாக்கின்றது. அதுமட்டுமின்றி, துளசியானது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடவும், நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் தொற்று நோய்களை எதிர்த்து போராடவும் பெரிதும் உதவுகிறது. அதுபோல, துளசி இலைகளை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: நெஞ்செரிச்சலால் அவதிப்படுறீங்களா..? அப்ப பாலில் இந்த ஒரு பொருளை கலந்து நைட் குடிங்க..!
கருப்பு மிளகு நன்மைகள்:
கருப்பு மிளகும் நம்முடைய ஆரோக்கியத்திற்கு பலவிதமான நன்மைகளை வாரி வழங்குகிறது. மேலும், இது செரிமான நொதிகளின் உற்பத்தியை தூண்டுவதால், ஊட்டச்சத்துக்களின் உறிஞ்சுகளுக்கு பெரிதும் உதவுகிறது. ஆய்வு ஒன்றில், கருப்பு மிளகானது செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது என்று கண்டறிந்துள்ளனர். அதுமட்டுமின்றி, கருப்பு மிளகில் இருக்கும் பைப்பரின் என்ற கலவையானது அலர்ஜி எதிர்ப்பு பண்புடையது. இது வீக்கம் மற்றும் வலியை குறைக்க உதவுகிறது. ஆகையால், அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் கருப்பு மிளகை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.
இதையும் படிங்க: கை கால்களில் அடிப்பட்டகாயங்களுக்கு இனி ஹாஸ்பிடல் போகாதீங்க.. பெஸ்ட் வீட்டு வைத்தியம் இதோ..!
தேன் நன்மைகள்:
தேனை சாப்பிட விரும்பாதவர்கள் யாருமே இல்லை என்று சொல்லலாம். ஏனெனில், இது இனிப்பு சுவை உடையது. இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. ஆய்வு ஒன்றில், தேனானது பலவித நோய்க்கிருமிகளின் வளர்ச்சியை தடுக்க பெரிதும் உதவுகிறது என்று கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, தேன் தொண்டைப்புண் மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும். குறிப்பாக, குழந்தைகளின் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த பெரிதும் உதவும்.
இப்படி எக்கச்சக்க நன்மைகளைக் கொண்டுள்ள இந்த மூன்றையும் ஒரே கலவையாக சேர்த்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்? ஆம், இந்த கலவையானது சளி இருமல் மட்டுமின்றி, சுவாசப்பதில் ஏற்படும் எரிச்சலையும் தணிக்க பெரிதும் உதவுகிறது.
துளசி இலைகள், கருப்பு மிளகு மற்றும் தேன் ஆகியவற்றில் மருந்து தயாரிப்பது எப்படி?
இந்த மூன்று கலவையில் இருந்து மருந்தை தயாரிக்க முதலில் ஐந்து துளசி விழிகள் ஒரு ஸ்பூன் கருப்பு மிளகு தூள் மற்றும் தேன் ஆகியவற்றை ஒரு பேஸ்ட் போல் எடுத்து கொள்ளுங்கள் பிறகு அதை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் அற்புதமான பலன்களை பெறுவீர்கள் குறிப்பாக காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சளி இருமல் காய்ச்சல் தொண்டை வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D