இனி துணி துவைக்கும் போது இந்த 3 பொருளை தண்ணீரில் கலந்து துவைங்க.. ஆடைகளில் வியர்வை வாடை அடிக்காது!

By Kalai Selvi  |  First Published Jul 17, 2024, 11:09 AM IST

Sweat Smell From Clothes : ஆடைகளில் அடிக்கும் வியர்வை நாற்றத்தை போக்க சில எளிய குறிப்புகளை மற்றும் பின்பற்றினால் போதும். அவை..


பொதுவாக சிலருக்கு பிறரை காட்டிலும் அளவுக்கு அதிகமாக வியர்வை கொட்டும். இதனால் அவர்களிடம் இருந்து வரும் துர்நாற்றம் பக்கத்தில் யாரும் நிற்க முடியாத அளவிற்கு மோசமாக இருக்கும். அதுமட்டுமின்றி இயற்பியல் அவர்களது ஆடைகளில் வெள்ளை மற்றும் கருப்பு புள்ளிகள் தானாகவே உருவாகிறது. 

இத்தகைய சூழ்நிலையில், பல முயற்சிகள் செய்தும் ஆடைகளில் இருந்து வரும் துர்நாற்றத்தையும், வியர்வை கறைகளையும் நீக்க முடியாமல் சிரமப்படுகிறீர்கள் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. ஆம், ஒரு ரூபாய் செலவில்லாமல் வியர்வை நாற்றத்தை சுலபமாக போக்கலாம். மேலும், இது செய்வது மிகவும் எளிதாக இருக்கும். எனவே, இந்த கட்டுரை சில எளிய குறிப்புகளின் உதவியுடன் துணிகளை சுத்தமாகவும், துர்நாற்றம் இல்லாமல் செய்யலாம். 

Tap to resize

Latest Videos

ஆடைகளில் இருந்து வரும் வியர்வை நாற்றத்தை போக்க சில குறிப்புகள் இங்கே: 

1. எலுமிச்சை:
எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் என்று நம் அனைவரும் தெரியும். மேலும் எலுமிச்சை ஆரோக்கியத்திற்கு மட்டுமே உதவும் என்று நீங்கள் நினைப்பது தவறு. ஏனெனில், எலுமிச்சை பழத்தை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தலாம் தெரியுமா..? ஆம், ஆடைகளில் இருந்து வியர்வை நாற்றத்தை போக்க எலுமிச்சை உதவுகிறது. இதற்கு நீங்கள் துவைக்கும் நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து சேர்த்தால் வியர்வை நாற்றத்தை எளிதில் நீக்கலாம்.

2. பேக்கிங் சோடா:
பேக்கிங் சோடா ஒரு நல்ல கிளீனர் ஆகும். இவற்றை பயன்படுத்துவது மூலம் உங்கள் துணிகளில் இருந்து வரும் வியர்வை நாற்றத்தை எளிதாக நீக்கலாம். இதற்கு பேக்கிங் சோடாவை நீங்கள் பயன்படுத்தும் தண்ணீரில் கலந்து துணிகளை துவைக்க வேண்டும்.

இதையும் படிங்க:  சுட்டெரிக்கும் வெயில்.. வியர்வை வெளியில் தெரியாமல் இருக்க 'இந்த' கலர்ல டிரஸ் போடுங்க!

3. வினிகர்:
வினிகர் துணிகளில் இருந்து வரும்  வியர்வை நாற்றத்தைப் போக்க பயனுள்ளதாக இருக்கும். இதற்கு முதலில் ஒரு வாளியில் சூடான நீரை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் 2 ஸ்பூன் வினிகர் சேர்த்து துணிகளை ஊற வையுங்கள். சிறிது நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் துணிகளை அலசுங்கள்.

4. சூரிய ஒளியில் நன்கு காய வைக்க வேண்டும்:
பலர் துணியின் நிறம் மங்கி விரைவில் கிழிந்து விடும் என்ற பயத்தில் வெயிலில் ஆடைகளை காய வைப்பதில்லை. ஆனால், வியர்வை நாற்றத்தை போக்க துணிகளை வெயிலில் கண்டிப்பாக காய வைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  குளித்த பிறகும் வியர்வை நாற்றம் அடிக்குதா? உங்களுக்கான சிம்பிள் டிப்ஸ் இதோ!

5. அதிக நேரம் ஊற வைக்க வேண்டாம்:
பலர் துணிகளை அதிக நேரம் ஊற வைத்து துவைக்கிறார்கள். ஆனால், இப்படி துவைத்தால் ஆடையிலிருந்து வியர்வை நாற்றம் போகாது எனவே துணிகளில் வியர்வை நாற்றம் அடிக்காமல் இருக்க துணிகளை அதிக நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!