international day of happiness: சர்வதேச மகிழ்ச்சி தினத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்...
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ஆம் தேதி அன்று 'சர்வதேச மகிழ்ச்சி தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் உங்களை சுற்றியுள்ளவர்களை மகிழ்விக்க செய்யக் கூடிய எளிய விஷயங்களை இங்கு காணலாம். இன்றைய தினம் பகிரக் கூடிய வாழ்த்துகளையும் இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
வரலாறு..
ஆரோக்கியமான வாழ்க்கைக்கும், நீண்ட ஆயுளுக்கும் மகிழ்ச்சி ரொம்ப அவசியம். நாம் மன அழுத்தமின்றி மகிழ்ச்சியாக இருப்பதை வலியுறுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 2013ஆம் ஆண்டு இந்த நாள் முதன்முதலில் ஐக்கிய நாடுகள் சபையால் (UN) தொடங்கப்பட்டது. தேசத்தின் மகிழ்ச்சி முக்கியத்துவத்தை நம்பிய பூட்டானால் முதலில் வலியுறுத்தப்பட்ட ஒரு முன்முயற்சியாகும்.
மகிழ்ச்சி தின வாழ்த்துகள்
இந்தாண்டின் மகிழ்ச்சி தின கருப்பொருள்,"நினைத்து பாருங்கள், நன்றியுடன் இருங்கள், கனிவாக இருங்கள்" என்பதாகும். இன்றைய தினம் பரிமாறி கொள்ளக் கூடிய வாழ்த்துகள் இதோ...!
1. உங்களைச் சுற்றி இன்னும் எஞ்சியிருக்கும் அனைத்து அழகையும் நினைத்து மகிழ்ச்சியாக இருங்கள். சர்வதேச மகிழ்ச்சி தின வாழ்த்துக்கள்
2. எப்போதும் முகத்தில் புன்னகையுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள், உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி மலரட்டும்!
3. சர்வதேச மகிழ்ச்சி தினத்திற்கு வாழ்த்துகள். மகிழ்ச்சி உங்களைச் சுற்றிதான் உள்ளது; நீங்கள் அதை எப்போது கண்டுபிடிக்கிறீர்களோ அதை கூடவே வைத்து கொள்ளுங்கள்.
4. சின்ன விஷயங்களில் மகிழ்ச்சியைக் கண்டுபிடியுங்கள், வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சி உங்களை நீங்காது என்பதை புரிந்து கொள்வீர்கள்.
5. நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், உங்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை, ஆனால் நீங்கள் சோகமாக இருந்தால், சிறந்த விஷயங்கள் கூட உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தராது. எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். சர்வதேச மகிழ்ச்சி தின வாழ்த்துக்கள்!
இதையும் படிங்க: kidney: ஆயுளுக்கும் சிறுநீரக பிரச்சினை வராது.. இந்த 4 விஷயங்களை செய்தால்.. உங்க கிட்னி ஆரோக்கியமா இருக்கும்..!
சந்தோஷத்தை பகிர சில டிப்ஸ்..!
இதையும் படிங்க: உலக சிட்டுக்குருவி தினம் இன்று..! கீச்...கீச்.. சிட்டுக்குருவிகளை நம் வீட்டிற்கு எப்படி கொண்டு வர வேண்டும்?