
3 நாட்களில் அரசு வேலை..! மருத்துவர்களும் செவிலியர்களும் தயாராக இருங்க..! முதல்வர் அதிரடி உத்தரவு..!
மருத்துவதுறையில் 3038 பணியிடங்கள்
கொரோனா எதிரொலியால் மருத்துவ பணியாளர்களை உடனடியாக நியமிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளார்
கொரோனா பரவுதல் அதிகரித்து வருவதாலும், அதனை கட்டுப்படுத்தும் பொருட்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கூடுதல் மருத்துவ பணியாளர்களை நியமனம் செய்ய உள்ளது அதன் படி, 530 மருத்துவர்களும்,1000 செவிலியர்களும்,1508 லேப் டெக்னீஷியன்கள், 200 கால ஊர்திகள் என அனைத்தும் நிரப்பப்படுகின்றன
அதிலும் குறிப்பாக, இவர்கள் அனைவரும் பணி ஆணை கிடைத்த 33 நாட்களில் பணியில் வந்து சேர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பரவுதல் அதிகரித்து வருவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்களும் செவிலியர்களும் வேண்டும் என்பதால் தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இதன் மூலமாக ஏற்கனவே விண்ணப்பித்து அரசு பணிக்காக காத்திருந்த மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும்,லேப் டெக்னீஷியர்களும் தகுதியின் அடிப்படையில் உடனடியாக வேலை பெறுவர்
ஆக மொத்தத்தில் 3000 கும் அதிகமானோருக்கு உடனடி அரசு வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.