என்னடா பண்ணி வச்சிருக்கீங்க... கொரோனா போண்டாவுக்கு போட்டியா கொரோனா பர்கர்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 27, 2020, 1:28 PM IST
Highlights

ஹனோய் நகரில் செயல்படும் பீட்சா கடை ஒன்று கொரோனா வைரஸ் வடிவம் போன்ற பர்கர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது மெல்ல, மெல்ல உலக நாடுகளை ஆட்டிபடைக்கிறது. வல்லரசுகள் கூட கண்டு அஞ்சும் அளவிற்கு கொரோனா பாதிப்பு நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸின் தீவிரத்தை கண்டு உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கை பிறப்பித்துள்ளன. 


இந்தியாவில் வைரஸ் தாக்குதலால் 694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை இங்கு மேலும்  6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையை மீண்டும் மீட்டெடுப்பதற்காக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ஊரடங்கிலும் கட்டுக்கடங்காத கிரண்... கொரோனாவை விட மிரட்டும் கவர்ச்சி..!

இப்படி பார்த்தாலே வயிற்றில் புளி கரைக்க வைக்கும் கொரோனா உருவத்தை வைத்து மீம்ஸ்களும், டிரோல்களும் பறக்கின்றன. சிலரோ அதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் கொரோனாவை வைத்து புது, புது உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அப்படி தான் சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் கொரோனா போண்டா மற்றும் தோசையின் புகைப்படங்கள் வைரலானது.

இதையும் படிங்க: “இதுதான் என் கடைசி போட்டோ”... கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு தலைமறைவான சனம் ஷெட்டி...!

தமிழ்நாட்டில் தான் இப்படி நக்கல் மன்னர்கள் இருக்கிறார்கள் என்று பார்த்தால், கொரோனா பீதியில் இருந்து முற்றிலும் தப்பித்துள்ள வியட்நாமில் கொரோனா பர்கர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க: ஊரடங்கில் வீட்டுக்குள் புகுந்து விளையாடும் மன்மத ராசாக்கள்... அதிகரித்த ஆணுறை விற்பனை...!

ஹனோய் நகரில் செயல்படும் பீட்சா கடை ஒன்று கொரோனா வைரஸ் வடிவம் போன்ற பர்கர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வடிவிலான பர்கரை சாப்பிடும் போது மக்களுக்கு பாசிட்டிவ் எண்ணங்கள் தோன்றும் என்ற நல்ல நோக்கிலேயே இவை வடிவமைக்கப்பட்டதாக கடையின் உரிமையாளர் விளக்கம் அளித்துள்ளார். 

click me!