போலிஸாருக்கு கிடைத்த அதிரடி உத்தரவு..! மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இதுதான்..!

By ezhil mozhiFirst Published Mar 27, 2020, 12:23 PM IST
Highlights

தொலைபேசி வாயிலாகவும், தொலைக்காட்சி மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் தொடர்ந்து கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது அரசு மற்றும் தன்னார்வலர்கள்.

போலிஸாருக்கு கிடைத்த அதிரடி உத்தரவு..! மக்கள் தெரிந்துகொள்ள  வேண்டியது இதுதான்..! 

கொரோனா பரவுதலை தடுக்க வரும் 21  ஊரடங்கு உத்தரவை பிரதமர் இருந்தாலும் சிலர் விபரீதம் புரியாமல் வெளியில் நடமாடிக்கொண்டே உள்ளனர்.

தொலைபேசி வாயிலாகவும், தொலைக்காட்சி மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் தொடர்ந்து கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது அரசு மற்றும் தன்னார்வலர்கள். இந்த நிலையில் அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டிருப்போர், பொது சேவை செய்வோர், நாளிதழ் வினியோகம் செய்வோர் மீது, போலீசார் தடியடி நடத்தியது பார்க்க முடிந்தது.

இதனை தொடர்ந்து ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம் என போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். மேலும் சென்னை, பூக்கடை போலீஸ் துணை கமிஷனர், ராஜேந்திரன் வாட்ஸ் ஆப் ஆடியோ மூலம் பொலிஸாருக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

அதன் படி 

போலீசார் கையில் லத்தி வைத்திருக்கக் கூடாது. ஊரடங்கு உத்தரவு எதற்கு என மக்களுக்கு புரியவைக்க வேண்டுமே தவிர பொது மக்களை மிரட்டவோ, பயமுறுத்தவோ கூடாது. வெளியில் வருபவர்களை எல்லாம் அடித்து விட கூடாதுஅத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும் கால்நடை தீவனங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை விட்டு விடுங்கள், வங்கி ஏ.டி.எம்.,மிற்கு செல்வோர், மருத்துவமனைக்கு  செல்வோர்களை விட்டுவிடுங்கள். மற்றவர்கள் தேவை இல்லாமல் வெளியில் வந்தால் விசாரித்து  அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வையுங்கள்.

போலீசார் வாகனங்களை வழிமறிக்க வேண்டாம், இதனை போக்குவரத்து போலீசார் பார்த்துக்கொள்வார்கள் . பொது அறிவை பயன்படுத்தி எப்படி மக்களிடம் நடந்துகொள்ள வேண்டும் என்பதனை புரிந்துகொள்ளுதல் வேண்டும் என தெரிவித்து உள்ளார் .

அதே வேளையில் மக்களும் நிலைமையை நிலைமையை புரிந்துகொள்ளுதல் வேண்டும். தடி அடி நடத்தினால் தான் மக்கள் புரிந்துகொள்வார்கள் என்ற எண்ணம் பொலிஸாருக்கு ஏற்படுத்தாமல் இருக்க அவரவர் வீட்டில்  தனிமை படுத்திக்கொள்ளுதல் வேண்டும். 
 

click me!