இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டுத்தீ வேகத்தில் பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளன.பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்யும் படி அறிவுறுத்தியுள்ளன. 

உலகின் பல்வேறு நாடுகளில் மாஸ்க், கையுறை மற்றும் மருத்து பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், ஆணுறையின் விற்பனையும் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. 

எல்லாரையும் வீட்டிலேயே இருங்க என்று சொன்னாலும் சொன்னாங்க காதல் தம்பதிகள் தாம்பத்திய உறவில் புகுந்து விளையாட ஆரம்பித்துவிட்டனர் போல. அதனால் தான் ஆணுறையின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக மருந்தகங்கள் மற்றும் ஆன்லைன் மருத்து விற்பனை நிறுவனங்கள் கூறியுள்ளன. 

இதுகுறித்து மருத்து விற்பனை கடைகளில் விசாரித்த போதும் மாஸ்க், சத்து மாத்திரைகள், மருத்து பொருட்களை கேட்டு வருவோரை போலவே, ஆணுறை மற்றும், கருத்தடை மாத்திரைகளை கேட்டு வாங்கிச்செல்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.