வெப்பத்தின் தாக்கத்தால் ஏசி, பிரிட்ஜ் போன்ற மின்னணு சாதனங்களில் ஏற்படும் தீ விபத்துகளை தவிர்க்க, சில குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும் அவை..
கோடை காலம் முடிந்து விட்டாலும், இன்னும் பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்த பாடுடில்லை. இந்த காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் ஏசியின் பயன்பாடு அதிகம் இருக்கும். ஆனால், அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக பல இடங்களில் ஏசி வெடித்த சம்பவத்தை நம்மால் செய்திகளில் பார்க்க முடிந்ததும்.
ஏசி, பிரிட்ஜ் போன்ற வீட்டில் இருக்கும் மின்னணு சாதனங்களில் இருக்கும் மெர்குரியின் அளவு அதிகரிப்பதால் அது குறிப்பிட்ட தக்க விளைவை ஏற்படுத்தி, வீட்டில் உள்ளவர்களையும் பாதிப்படையச் செய்கிறது. வெப்ப அலைகள் தான் மின்சாரத்தின் அதிகாரத்தை உண்டாக்கி உள்ளிருக்கும் சர்க்யூட்டுகளில் சேதத்தை உண்டாக்கியது. இதனால்தான், அவை தீப்பிடிக்க முக்கிய காரணமாகும். இந்த மாதிரியான சேதங்களில் இருந்து அவற்றை பாதுகாக்க சில முன்னேற்றிருக்கை நடவடிக்கைகளை மட்டும் எடுத்தால் போதும். அவை என்ன என்பதை குறித்து இப்போது இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
இதையும் படிங்க: AC யூஸ் பண்ணும் போது 'இந்த' தவறுகளை செய்யாதீங்க.. மின் கட்டணம் ஏகிறும்!
கோடை வெப்பத்தால் மின்னணு சாதனங்கள் சேடைமடைவதற்கான காரணங்கள்:
அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக மின்னணு சாதனங்கள் அளவுக்கு அதிகமாக சூடாகிறது. இதனால் அதில் இருக்கும் பாகங்கள் செயலிழந்து விடுகிறது. எனவே, அவற்றை முறையாக பராமரிப்பு செய்து அதில் காற்றோட்டம் சீராக செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் அவை எப்போதும் குளிர்ச்சியாகவே வையுங்கள். பொதுவாகவே, வெப்பத்தின் அலையானது அதிகப்படியான மின்சார பயன்பாட்டிற்கு வழிவகுக்கும்.
இதனால் மின்சாரம் திடீர் அதிகரிப்பதால், மின்னணு சாதனங்களில் இருக்கும் உட்புற சர்க்யூட்டுகள் சேதமடையும். ஆனால், நாம் சர்ஜ் ப்ரொடகர்களை பயன்படுத்துவதன் மூலம் மின்னணு சாதனங்களை பாதுகாக்கலாம். அதுமட்டுமின்றி, மின்னணு சாதனங்கள் வழக்கத்தை விட வெப்பமான காலகட்டத்தில், அதிகப்படியாக வேலை செய்வதால், அவற்றின் செயல் திறனும் ஆயுளும் குறைந்து விடும். எனவே, எப்போதும் அவற்றை சூரிய ஒளிக்கு மறைவாகவும், காற்றோட்டமான இடத்தில் வைப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: AC Tips For Summer : கோடையில் ஏசியை பயன்படுத்துபவரா..? இந்த டெம்பரேச்சர்ல வைங்க ஆபத்து வராது!
அதிகப்படியான வெப்பத்தால் மின்னணு சாதனங்களை பாதுகாக்க வழிகள்:
1. நீங்கள் வெளியில் செல்லும்போது அல்லது பயணத்தின் போது உங்களது மொபைல் போன்கள், லேப்டாப்கள், டேப்லெட்டுகள் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில், அவற்றை குளுமையான இடத்தில் வைக்கவும். மேலும் நீங்கள் உங்களது மொபைலில் லோ பவர் மோடை எப்போதும் ஆன் செய்து வையுங்கள். இதன் மூலம் பேட்டரியை சேமிக்கலாம் மற்றும் உங்களது மொபைலும் சூடாவதைத் தடுக்க முடியும்.
2. பிரிட்ஜ் மட்டும் ஃப்ரீசரின் கதவு எப்போதும் சரியாக மூடி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், பிரிட்ஜை வழக்கமான முறையில் அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள். காயிலையும் சுத்தம் செய்யும் மறக்காதீர்கள். முக்கியமாக, ஃப்ரிட்ஜுக்கும் சுவற்றுக்கு இடையே போதுமான அளவு இடைவெளி இருக்க வேண்டும்.
3. உங்கள் வீட்டில் இருக்கும் ஏசியின் பில்டர்களை மாற்றவோ அல்லது சுத்தம் செய்வதோ மிகவும் அவசியம். மேலும் நிழலான இடத்தில் வையுங்கள்.
4. வீட்டில் இருக்கும் வாஷிங் மெஷின் மற்றும் டிரையர்களை நல்ல காற்றோட்டமான இடத்தில் வைப்பது உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், அவற்றின் ஃபில்டர்கள் மற்றும் துளைகளை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள். முக்கியமாக வாஷிங் மெஷினில் அளவுக்கு அதிகமாக துணியை போட வேண்டாம். மீறினால், மோட்டரில் அழுத்தம் ஏற்பட்டு, விரைவில் பாழாகிவிடும்.
5. இவை தவிர உங்கள் வீட்டில் இருக்கும் எலக்ட்ரானிக் பாதுகாக்க லக்கை அவிழ்த்து விடுங்கள். கூலிங் பேடு வைப்பதன் மூலம் சாதனங்களில் இருக்கும் வெப்பத்தை வெளியேற்ற உதவுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D