
இன்றைய காலகட்டத்தில் நாம் மோசமான வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நாம் உண்ணும் உணவு கூட மோசமாகி விட்டது. ஆம், உலகம் நவீனம் ஆகிவிட்டது போல, நாம் உண்ணும் உணவும் நவீனமாகிவிட்டது என்பது தான் உண்மை.
பீட்சா, பர்கர், சாண்ட்விச் என இது போன்ற பல உணவுகள் சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும் அவை நம் உடற் ஆரோக்கியத்திற்கு மோசமானது என்பது நாம் அனைவரும் அறிந்தது இருந்தபோதிலும் அவற்றை நாம் அவ்வப்போது சாப்பிடுகிறோம். இதுபோன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதால் உடலில் பலவிதமான உபாதைகள் வருவதோடு மட்டுமின்றி வயிறும் அசுத்தமாகும். நம்முடைய உடலின் வெளிப்புறம் எவ்வளவு சுத்தமாக இருக்க வேண்டுமோ, அதை விட நம்முடைய வயிறு சுத்தமாக இருப்பது மிகவும் அவசியம். எனவே, வயிற்றை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்.
வயிற்று சுத்தம் செய்ய பல வழிகள் இருந்தபோதிலும் சீரகப்பொடி இதற்கு ஒரு நல்ல தீர்வாகும். காரணம் அஜீரணக் கோளாறு தான். குறிப்பாக நாம் சாப்பிடும் உணவு ஒழுங்கான முறையில் ஜீரணமாகி விட்டால் நாம் வயிறு எப்போதும் சுத்தமாக இருக்கும். ஒருவேளை, ஜீரணமாவதில் தாமதம் ஏற்பட்டால் வயிற்றில் பிரச்சினை ஏற்படுவது ஏற்படுவதோடு மட்டுமின்றி, வயிறும் அசுத்தமாக இருக்கும். எனவே, வயிற்றை சுத்தப்படுத்த ஜீரணப் பொடியை பயன்படுத்துங்கள். இதற்காக நீங்கள் கடைகளில் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று அவசியமில்லை, உங்கள் வீட்டிலேயே ஜீரண பொடியை தயாரிக்கலாம் எனவே, இந்த பதிவில் வீட்டிலேயே ஜீரண பொடியை எப்படி தயாரிப்பது மற்றும் அதை பயன்படுத்தும் முறை என்ன என்பதை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: உங்களுக்கு இந்த மாதிரி 4 அறிகுறிகள் இருக்கா..? அது நிச்சயம் வயிற்று புற்று நோய் தான்... ஜாக்கிரதை!
ஜீரண பொடி தயாரிக்க தேவையான பொருட்கள்:
மிளகு - 50 கிராம்
சுக்கு - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
ஓமம் - 50 கிராம்
வசம்பு - 50 கிராம்
இந்துப்பு - 50 கிராம்
இதையும் படிங்க: வாயு தொல்லையா..? ஒரு ஸ்பூன் பெருங்காயம் போதும்! இனி சத்தத்தால் சங்கடப்படமாட்டீங்க...
செய்முறை:
மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் தனித்தனியாக வறுத்து, அதை பொடியாக எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த பொடி அனைத்தையும் ஒன்றாக கலக்கி விடவும். அவ்வளவுதான் ஜீரணப் பொடி தயார்.
பயன்படுத்தும் முறை:
எனவே, வயிற்று தொடர்பான பிரச்சனையால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால், உடனே உங்களது வீட்டில் இந்த ஜீரண பொடியை தயார் செய்து சாப்பிடுங்கள். விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.