Indians : இந்தியர்கள் வருடத்திற்கு அதிகபட்சமாக உணவு மற்றும் கல்வியை விட ஒரு விஷயத்திற்க்கு அதிக அளவில் செலவு செய்வதாக பிரபல நிறுவனம் நடத்திய சர்வே கூறுகின்றது.
இந்தியாவில் உணவு மற்றும் மளிகை பொருட்களுக்கு அடுத்தபடியாக, வருடத்திற்கு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படுவது திருமணத்திற்கு தான் என்று நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சராசரியாக ஒரு இந்தியர், கல்வியை விட திருமண வைபவத்திற்கு தான் இரண்டு மடங்கு செலவு செய்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
சீனாவை பொறுத்தவரை 70 முதல் 80 லட்சம் திருமணங்கள் வருடம் தோறும் நடந்து வருகின்றது. அதே அமெரிக்காவில் வருடத்திற்கு 20 முதல் 25 லட்சம் திருமணங்கள் நடைபெறுகின்றதாம். ஆனால் இந்தியாவில் ஒரு வருடத்தில் சராசரியாக சுமார் 80 லட்சம் முதல் 1 கோடி திருமணங்கள் நடைபெறுகின்றது. இதில் ஆறுதல் என்னவென்றால், இந்தியர்கள் வருடத்திற்கு திருமணத்திற்காக 130 பில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்யும் அதே நேரத்தில், சீனா வருடத்திற்கு 170 பில்லியன் வரை செலவு செய்கிறது.
undefined
இந்தியாவை பொறுத்தவரை திருமணங்கள் தான் இரண்டாவது பெரிய நிகழ்வாக விளங்குகிறது. இந்தியாவை பொறுத்தவை உணவு மற்றும் மளிகை பொருட்களுக்கு ஆண்டு தோறும் 681 பில்லியன் டாலர் செலவு செய்யப்படும் நிலையில், இரண்டாவதாக திருமணத்திற்கு தான் சுமார் 130 பில்லியன் டாலர்கள் செலவு செய்யப்படுகிறது.
இந்தியாவில் திருமணங்கள் என்பது பலவிதமான சடங்குகள் மற்றும் அதற்கான செலவுகளால் வகைப்படுத்தப்படுகின்றன.நகைகள், ஆடைகள் துவங்கி, எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஆட்டோ செலவுகள் வரை இதில் அடங்குகிறது. அதிலும் முக்கிய புள்ளிகளின் திருமணம் என்றால், அவை நடைபெறும் இடங்களுக்கான செலவுகள் கூட இதில் அடங்குகிறது.
இந்திய திருமணங்கள் பல நாள்கள் நடைபெறும் எளிமையானது முதல் மிக ஆடம்பரமானது வரை பல்வேறு விதங்களில் இங்கு திருமணங்கள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு நகரத்திற்கு திருமண சான்றுகள் என்பது மாறுபடும் என்பதும் அனைவரும் அறிந்ததே. சந்திர சூரிய அமைப்பைப் பின்பற்றும் இந்து நாட்காட்டி சிக்கலானது, ஏனெனில் திருமணங்கள் குறிப்பிட்ட மாதங்களில் நல்ல நாள்களில் மட்டுமே நடைபெறும், இது ஒவ்வொரு ஆண்டும் மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு திருமணத்திற்கான சராசரி செலவு 15,000 அமெரிக்க டாலர் (அதாவது 12 லட்சம் ரூபாய்) வரை உள்ளது என்று அந்த ஆய்வு கூறுகின்றது. இதை வைத்து பார்க்கும்போது ஒரு சராசரி இந்திய குடும்பம், தங்களின் கல்விக்கான செலவை விட 2 மடங்கு அதிகமாக திருமணங்களுக்கு செலவிடுகின்றனர். ஒரு திருமணத்தை நம்பி மட்டுமே பல துறைகள் செயல்பட்டு வருவதும் அனைவரும் அறிந்ததே.