Food Poisoning : நாம் சில காய்கறிகளை சரியாக கழுவவில்லை என்றால் அதில் நோய் கிருமிகள் அப்படியே இருக்கும். அந்த வகையில், சரியாக கழுவாவிட்டால் ஃபுட் பாய்சன் உண்டாக்கும் 7 காய்கறிகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
ஃபுட் பாய்சன் ஆவது ஒரு பொதுவான மற்றும் தீவிரமான பிரச்சனை. இது யாரை வேண்டுமானாலும் பாதிக்கும். நாம் உண்ணும் உணவு மாசுபடும் போது அதாவது கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வைரஸ்கள் உள்ளது ஒட்டுனிக்களால் ஃபுட்பாய்சன் ஆகிறது. இதற்கு முக்கிய காரணம் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை சரியாக கழுவாததாகும். சில காய்கறிகளை சரியாக கழுவவில்லை என்றால் அதில் நோய் கிருமிகள் அப்படியே இருக்கும். அந்த வகையில், சரியாக கழுவாவிட்டால் ஃபுட் பாய்சன் உண்டாக்கும் 7 காய்கறிகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
சரியாக கழுவாவிட்டால் ஃபுட் பாய்சன் உண்டாக்கும் 7 காய்கறிகள்:
undefined
பச்சை இலை காய்கறிகள்: கீரை, முட்டைகோஸ் போன்ற பச்சை இலை காய்கறிகள் சத்தானது என்றாலும். இவற்றில் ஈக் கோலி சால்மோ நிலா ஹிஸ்டரியை போன்ற பாக்டீரியாக்கள் இருக்கும். எனவே, இவற்றை ஒழுங்காக கழுவாமல் சமைத்தால் ஃபுட் பாய்சன் ஆகும்.
தோலுடன் சாப்பிடக்கூடிய பழங்கள் காய்கறிகள்: தக்காளி, ஆப்பிள், பெரிக்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றின் மேல் பாக்டீரியாக்கள் இருக்கும். எனவே, அவற்றை வெட்டி சாப்பிடும் பொது அல்லது தோல் உரிக்கும் போது பழத்தில் பாக்டீரியாக்கள் அதில் பரவும். எனவே அவற்றை தோலுரித்தாலும் மீண்டும் நன்றாக கழுவி பயன்படுத்தவும்.
இதையும் படிங்க: Kitchen Tips : இப்படி செஞ்சா ஒரு மாதம் வரை பச்சை மிளகாய் அழுகி போகாது! ட்ரை பண்ணி பாருங்க..
பெர்ரீஸ்: ஸ்ட்ராபெரிகள், ப்ளூபெர்ரிகள், ராஸ்பெரிகள் போன்ற பெரிய களில் பூச்சிக்கொல்லிகள் பாக்டீரியாக்கள் அவற்றின் தோல்களில் இருக்கும். எனவே, பெர்ரிகளை நன்றாக கழுவி அதை ஓடும் நீரில் நன்றாக கழுவி, பிறகு உலர்த்தி பயன்படுத்துங்கள்.
வேர் காய்கறிகள்: உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கி போன்ற வேர் காய்கறிகள் மண்ணில் பிரிந்து வளர்வதால் அவற்றில் பாக்டீரியாக்கள் அழுக்குகள் இருக்கும். எனவே, இவற்றை ஓடும்நீரில் நன்றாக கழுவி பயன்படுத்துங்கள்.
இந்த பழங்கள்: தர்பூசணி, பலாப்பழம், முலாம்பழம் போன்ற பழங்களில் மேற்பரப்பில் பாக்டீரியாக்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். எனவே, இந்த பழங்களை வெட்டும் முன் ஓடும் நீரில் நன்றாக கழுவி, அதன் மேற்பரப்பை ஒரு பிரஷ் கொண்டு கழுவுங்கள்.
இதையும் படிங்க: Kitchen Tips : இல்லத்தரசிகளே அவசியம் இந்த 7 கிச்சன் டிப்ஸ தெரிஞ்சு வச்சுக்கோங்க..
முள்ளங்கி: முள்ளங்கியில் ஈ கோலை மற்றும் சால்மோனெல்லா உள்ளிட்ட பாக்டீரியாக்கள் இருக்கும். எனவே, இவற்றை பயன்படுத்துவதற்கு முன் ஓடும் நீரில் நன்றாக கழுவி, பிறகு அதை சமையலுக்கு பயன்படுத்துங்கள்.
மூலிகைகள்: கொத்தமல்லி, துளசி போன்ற மூலிகைகள் மண்ணிலிருந்து வளரும் போது அழுக்கு மற்றும் பாக்டீரியாக்கள் சுற்றி இருக்கும். எனவே, அதை பயன்படுத்தும் போது கழுவுங்கள். அதிலிருந்து ஈரத்தை குறைக்க ஏதாவது ஒரு காகிதத்தை நன்கு உலர வைக்கவும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D