Latest Videos

PCOS பிரச்சினை உள்ள பெண்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய சூப்பர் ஃபுட்கள் இதோ..!

By Kalai SelviFirst Published Jun 28, 2024, 12:14 PM IST
Highlights

PCOS Diet Plan: PCOS சமயத்தில் என்ன உணவு முறை பின்பற்ற வேண்டும் என்பதை இந்த கட்டுரை மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

PCOS என்பது ஹார்மோன்களின் பிரச்சினையாகும். இதனால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கம் போன்றவையாகும். ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள், அதிக அளவு ஆண்ட்ரோஜன்கள் (ஆண் ஹார்மோன்கள்) மற்றும் மோசமான இன்சுலின் உற்பத்தி போன்ற பல அறிகுறிகளுடன் இது தொடர்புடையது.

PCOS என்றால் என்ன?
PCOS என்பது இன்றைய காலத்தில், பெண்களிடையே மிகவும் பொதுவான நோயாக மாறியுள்ளது. இதனால் மாதவிட ஒழுங்கற்றதாகிறது, முகத்தில் முடி வளர்ச்சி அதிகரிக்கிறது மற்றும் கர்ப்பப்பையில் நீர்கட்டிகள் உருவாக தொடங்குகின்றன. இது தவிர எடை அதிகரிப்பால் குழந்தை பிறப்பதில் சிரமம் ஏற்படும். மேலும், குழந்தையின்மை, கருசிதைவு மற்றும் பிற சிக்கலான பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க நேரிடும்.

இதையும் படிங்க: PCODயால் முகப்பரு வருதா..? அப்ப இந்த 3 பொருட்களை இளநீரில் கலந்து குடிங்க!

ஆனால், இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்கள் வாழ்க்கை முறையிலும், உணவு பழக்கத்தையும் சிறிதளவு மாற்றங்களை செய்ய வேண்டும். எனவே, PCOS சமயத்தில் என்ன உணவு முறை பின்பற்ற வேண்டும் என்பதை இந்த கட்டுரை மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  PCOS.. இந்த பிரச்சனை இருக்க பெண்கள் பால் அருந்த கூடாதா? நீர்க்கட்டிகள் பிரச்சனை கட்டுக்குள் வர என்ன செய்யனும்

PCOS ஐ கட்டுப்படுத்த சிறந்த உணவுகள் இங்கே..

  1. வெள்ளை ரொட்டி, வெள்ளை அரிசி ஆகியவற்றில் உயர் கிளைசெமிக் குறியீட்ட்டைக் கொண்டுள்ளன. எனவே, இதற்கு பதிலாக பழுப்பு அரிசி, கோதுமை ரொட்டி மற்றும் பல தானிய மாவு ரொட்டிகளை சாப்பிடுங்கள்.
  2. அனைத்து வகையான பெரிக்களும் PCOSக்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே, அவற்றை நீங்கள் எந்த பயமுமின்றி சாப்பிடலாம். அதுபோல திராட்சை, செர்ரி, ஆப்பிள், அவகோடா, பப்பாளி ஆகிய பழங்கள் PCOSக்கு சிறந்தது.
  3. PCOSக்கு, பச்சை காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் உதாரணமாக பிரக்கோலி, காலில் ஆகியவற்ற பருவ கால பச்சை காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுங்கள். மேலும் கீரை, கோஸ் போன்ற இலை காய்கறிகளையும் உங்கள் வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
  4. நீங்கள் பாதாம், பிஸ்தா, அக்ரூட் பருப்புகள், உலர்ந்த பழங்கள் ஆகியவற்றையும் சாப்பிடலாம் ஆனால் அவற்றை குறைந்த அளவில் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
  5. உங்கள் உணவில் புரதம் மிகவும் அவசியம் என்பதால் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களை சாப்பிடலாம். அதுபோல தயிர், இறைச்சி, மீன், முட்டை ஆகியவற்றையும் நீங்கள் சாப்பிடலாம்.
  6. நீங்கள் இனிப்பு சாப்பிட விரும்பினால் டார்க் சாக்லேட் சாப்பிடுங்கள். முக்கியமாக நீங்கள், வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை, தேன் ஆகியவற்றை பயன்படுத்துங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!