வீட்டில் மனைவி உள்ளாடைகளுடன் நடமாடுவதால் சங்கடத்தில் தவிக்கும் கணவனின் சோக பகிர்வினை இங்கு காணலாம்.
வீட்டில் மனைவி உள்ளாடைகளுடன் நடமாடுவதால் சங்கடத்தில் தவிக்கும் கணவனின் சோக பகிர்வினை இங்கு காணலாம்.
"என்னுடைய மனைவியால் எனக்கு நிம்மதியே இல்லை. அவள் வீட்டினில் உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொண்டு திரிவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதை வெளிப்படையாகவே நான் சொல்லிவிட்டேன். ஆனால் அதை வேடிக்கையாக எடுத்து கொள்கிறாள். நாங்கள் தனிக்குடித்தனமாக தான் வாழ்கிறோம். இருந்தாலும் இதை நினைப்பதும் அவளை அரை நிர்வாணமாக பார்ப்பதும் எனக்கு பிடிக்கவில்லை. நான் என்ன தான் செய்ய வேண்டும்?" என கேட்டுள்ளார்.
இந்தக் கேள்விக்கு நிபுணர் ஆலோசனை: உறவுகள் சில நேரங்களில் நம்மை மிகவும் சோதித்துவிடும். அதிலும் கணவன் மனைவி உறவு அதிக அனுசரணையை கொண்டிருக்க வேண்டும். குழந்தை பெற்று கொள்வது நமக்கென தனிக்குடும்பம் போன்ற எதிர்பார்ப்புடன் நாம் உறவில் நுழைவோம். ஆனால் நம்முடைய நேர்மையான கோரிக்கையை கூட நம் துணை தீவிரமாகக் கருதாதபோது மனதளவில் காயமும் விரக்தியும் அடைவோம். இது புரிந்துகொள்ளத்தக்கது. இரு மாதிரியான சந்தர்ப்பங்களில் நம் துணையிடம் அதனை தெரிவிக்க வேண்டியது அவசியம்.
இதையும் படிங்க: 'கணவர் என் உள்ளாடைகளை அணிகிறார்'- அதை பார்த்தாலே... புலம்பும் பெண்.. எதனால் தெரியுமா?
நேர்மையுடனும் மரியாதையுடனும் நம் மனதில் தோன்றுவதை சொல்லவேண்டியது முக்கியம். அதை விட்டு நாம் கோபமாக சொன்னால் அல்லது அவர்களை அவமதித்தால் நாம் சொல்ல. வருவதை கூட, நம் துணை கேட்கமாட்டார்கள். ஆனாலும் உங்கள் மனைவியிடம் இது குறித்து நீங்கள் உரையாடுவதற்கு முன்பாக நிர்வாணம் குறித்த உங்களுடைய எண்ணங்களை சிந்தித்துப் பார்க்க அறிவுறுத்துகிறேன். பொதுவாக நிர்வாணமான உடல் உங்களுக்கு எதனை நினைவுபடுத்துகிறது? அதனால் உங்களுக்கு எந்தளவு அசௌகரியம் ஏற்படுகிறது? கவர்ச்சிக்கு நீங்கள் சொல்லும் வரையறை என்ன? நிர்வாணத்தைப் பற்றிய உங்களுடைய எண்ணங்கள்.. ஆகியவற்றை குறித்து மீண்டும் ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்.
இதையும் படிங்க: நிர்வாணமாக தூங்க அடம்பிடிக்கும் கணவன்.. அதுக்கு வேலைக்கார பெண் சொன்ன விஷயம்.. குமுறும் பெண்
உங்கள் மனைவியை போல் நீங்களும் உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொண்டால் வசதியாக உணர்வீர்களா? ஒருவேளை இல்லையென்றால் அது ஏன்? நம்முடைய குழந்தை பருவத்தில் நமது உடல்கள் எப்போதும் மறைத்து வைக்க பழக்கப்படுத்தப்படுகிறது. நம்முடைய இளம்பருவத்திலும், முதிர் வயதிலும் அதே மாதிரியான கட்டுப்படுத்தும் நடத்தைகளே நாம் பின்பற்றுகின்றோம். இது ஒவ்வொருவருடைய பாலினத்தை பொறுத்தும் வித்தியாசப்படுகிறது. உதாரணமாக ஆண்கள் அரை நிர்வாணமாக, அதாவது சட்டையணியாமல் இருப்பது யாருக்கும் தொந்தரவாக தோன்றுவதில்லை. ஆனால் பெண்களுக்கு இது வித்தியாசப்படுகிறது. உங்கள் மனைவியின் நிர்வாணம் உங்களால் ஏற்றுகொள்ள முடியாமல் போனதற்கு கலாச்சார கட்டுப்பாடுகள் காரணமாக இருக்கலாம். ஆனால் உங்கள் மனைவி உங்களுடன் உல்லாசமாகவும், சுதந்திரமாகவும் வாழவே விரும்புகிறார்.
நிர்வாணம் குறித்த நமது அடிப்படை நம்பிக்கைகளில் கலாச்சாரம் தான் பெரும் பங்காற்றுகிறது. நம் நாட்டு பெண்கள் தரை தொடும் அளவு நீளமான நைட்டி அல்லது சேலைகளை உடுத்தும் பழமைவாதக் குடும்பங்களில் வளர்ந்ததால், மற்ற ஆடைகளை அணிவது குறித்த நமது சிந்தனைகள் ஏற்று கொள்ளமுடியாததாக இருக்கிறது.
வீட்டிற்குள் நிர்வாணமாக உலவுவது உங்கள் மனைவிக்கு சுதந்திரமும் ஆறுதலின் அடையாளமாக இருக்கலாம். உங்களை பொருத்தவரையிலும் இந்த நடவடிக்கை பொருத்தமற்றது. குறிப்பாக நாகரீகமற்றது. இதை குறித்து மீண்டும் உங்கள் துணையுடன் விவாதியுங்கள். அவரையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். பகலில் அல்லாமல் இரவில் படுக்கையறையில் அரை நிர்வாணமாக இருந்தால் நீங்கள் ரசிப்பதாக உத்தரவாதம் கொடுங்கள். நீங்கள் அவரை புரிந்து கொள்ள முயற்சி செய்தால் அவரும் உங்களை புரிந்து கொள்வார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D