Wheat Flour Storage Tips : கோதுமை மாவில் சீக்கிரமே வண்டு வருவதை தடுப்பது என்று இங்கு பார்க்கலாம்.
கோதுமை மாவை கடைகளில் வாங்கினால் கட்டுப்படியாகாது. காரணம் சுவையும் சற்று வித்தியாசமாக இருக்கும், விலையும் அதிகம். இதனால் பலர் கோதுமையை வாங்கி அதை நன்கு சுத்தம் செய்து, காய வைத்து பிறகு மில்லில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்வார்கள். பின் தேவைப்படும்போதெல்லாம் அதை பயன்படுத்துவார்கள்.
பொதுவாக அரைக்கும் வெள்ளை மாவுகளில் கொழுப்பு குறைவாக இருப்பதால் அவை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும். ஆனால் கோதுமை மாவு அப்படி இல்லை. அது குறைந்த நாள் தான் கெடாமல் இருக்கும். இதனால் சீக்கிரமாகவே அதில் வண்டுகள், பூச்சிகள் பிடித்து விடும். இதனால் மொத்தமாகவும் வீணாகிவிடும். ஆனால் சிலர் மாவில் வண்டு வந்தால் கூட அதை சலித்து பயன்படுத்துவார்கள். இன்னும் சிலரோ அதை குப்பையில் கொட்டி விடுவார்கள். கோதுமையை நன்கு அலசி காய வைத்து அரைத்த பிறகும் ஏன் வண்டு வருகிறது என்று யோசிக்கிறீர்களா? அதற்கான காரணங்கள் என்றும், கோதுமை மாவில் வண்டு வருவதை தடுப்பது எப்படி என்றும், அதை சேமிக்கும் சரியான முறை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
undefined
கோதுமை மாவில் வண்டு வருவதற்கான காரணங்கள் மற்றும் தடுக்கும் முறைகள் இங்கே:
காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்:
அரைத்த கோதுமை மாவில் வண்டு வருவதற்கு முக்கிய காரணம் காட்சி தான் ஆம் மாவில் காற்று படும்போது மாவு கெட்டுப் போக ஆரம்பிக்கும் இதனால் வண்டுகள் வரும். எனவே கோதுமை மாவை காற்றுப்படாமல் இறுக்கமான மூடிக்கொண்ட பாத்திரத்தில் போட்டு சேமிக்க வேண்டும். கோதுமை மாவு வைத்திருக்கும் பாத்திரத்தின் மூடி இறுக்கமாக இருந்தால் அதில் காற்றும் படாது வண்டுகளும் வராது.
வெயிலில் காயவை :
கோதுமை மாவில் அரைத்து டப்பாவில் வைத்த பிறகு அதை அவ்வப்போது வெயிலில் காயவைத்து பிறகு டப்பாவில் போட்டு வைக்கவும். ஏனெனில் மாவை அப்படியே வைத்தால் ஈரப்பதமாகி அதனால் பாக்டீரியாக்கள் வளர்ந்து விடும். வண்டுகளும் வர ஆரம்பிக்கும்.
கண்ணாடி ஜாடியில் சேமிக்கவும் :
கோதுமை மாவு கெட்டுப் போகாமல் இருக்க அதை கண்ணாடி ஜாடியில் வைத்து சேமிக்கலாம். இப்படி சேமித்தால் மாவு 10 மாதங்கள் ஆனால் கூட பிரஷ் ஆகவே இருக்கும். மேலும் வண்டுகளும் வராது. ஒருவேளை உங்களிடம் கண்ணாடி ஜாடி இல்லையென்றால் நீங்கள் காற்று போகாத பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து சேமிக்கலாம்.
இதையும் படிங்க: கோதுமையா, ராகியா? உடலுக்கு சத்துக்களை அள்ளி தருவது எந்த 'மாவு' தெரியுமா?
பிரியாணி இலை & கிராம்பு :
கோதுமை மாவில் கிராம்பு, பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு வைத்தால் மாவில் வண்டுகள் பூச்சிகள் இனி வரவே வராது. நீண்ட நாட்களும் கெடாமல் அப்படியே இருக்கும். இதுதவிர, அதில் வேப்ப இலை மற்றும் கல் உப்பையும் போட்டு வைக்கலாம்.
இதையும் படிங்க: இப்படி கூட 'கலப்படம்' செய்றாங்களா? வீட்டிலேயே 'போலி' கோதுமை மாவை எப்படி கண்டுபிடிப்பது?
சாக்கு பையில் வைக்காதே!
கோதுமை மாவை நீங்கள் சாக்கு பையில் வைத்து சேமித்தால் உடனே அதை ஒரு டப்பாவில் மாற்றி விடுங்கள். ஏனெனில் சாக்கு பை ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். இதனால் கோதுமை மாவில் ஈரம் பிடித்து, அது சீக்கிரமாகவே கெட்டுப் போய்விடும்.
பழைய மாவுடன் புது மாவை சேர்க்காதே!
பழைய கோதுமை மாவுடன் புது மாவை சேர்க்க வேண்டாம். எனவே கோதுமை மாவு வைக்கும் டப்பாவில் பழைய மாவு இருந்தால் அதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துவிட்டு புது மாவை டப்பாவில் போட்டு வைக்கவும். பழைய மாவுடன் புதுமாவை சேர்த்தால் வண்டுகள் வரும் மாவும் கெட்டுப் போய்விடும்.
டப்பாவில் ஈரம் இருக்க கூடாது:
நீங்கள் கோதுமை மாவை டப்பாவில் போடும் முன் அதில் ஈரம் இருக்கக் கூடாது என்பது உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஈரம் இருந்தால் கோதுமை மாவு சீக்கிரமாகவே கெட்டுப்போய்விடும். இதனால் வண்டு பிடிக்கும்.