8 Shape Walking : எட்டு வடிவில் நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு காணலாம்.
நடைபயிற்சி மிகவும் பயனுள்ள ஒரு உடற்பயிற்சி ஆகும். ஏனெனில் இது உடல் எடையை குறைக்கவும், கார்டியோ ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் , மன அழுத்தத்தை தடுக்கவும் உதவுகிறது என பல நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது. அதுவும் குறிப்பாக நீங்கள் வேலையில் மணிக்கணக்கில் உட்கார்ந்திருந்தால் உங்களது உடலை அசைக்க வேண்டிய நேரம் இது. அதாவது நீங்கள் ஆரோக்கியமாக இருக்க நடைப்பயிற்சி உங்களுக்கு உதவும்.
பொதுவாக நடைப்பயிற்சி தங்கள் விருப்பப்படி காலை அல்லது மாலையில் பலர் செய்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் உடல் எடையை குறைப்பதற்கு பல நடைபயிற்சியை தான் தேர்வு செய்கிறார்கள்.. தினமும் நடைப்பயிற்சி செய்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். 'இன்ஃபினிட்டி வாக்' என்று அழைக்கப்படுகிறது. எனவே, இப்படி நடைபயிற்சி செய்வதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
undefined
இதையும் படிங்க: 1 கி.மீ வாக்கிங்.. எவ்வளவு எடையை குறைக்கும் தெரியுமா?
எட்டு வடிவ நடைபயிற்சி என்றால் என்ன?
எட்டு வடிவ நடை பயிற்சி என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு செய்யக்கூடிய ஒரு எளிய மற்றும் பயனுள்ள பயிற்சியாகும். இந்த நடைபயிற்சிக்கு எண் 8 கீழே தட்டையாக கிடைப்பதை நினைத்து பார்த்து, எட்டு வடிவில் நடக்க ஆரம்பிக்கவும். ஆய்வு ஒன்றில் இந்த நடைப்பயிற்சி உங்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்குகிறது. தசைகளை ஈடுபடுத்துகிறது. மேலும் இது உங்கள் மூட்டுகளில் எளிதான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். சொல்ல போனால் இது உங்களது முழு உடலுக்கும் பயிற்சியை அளிக்கும்.
இதையும் படிங்க: சைக்கிளிங் vs வாக்கிங் : எடை இழப்புக்கு எது பெஸ்ட்?
எட்டு வடிவ நடைபயிற்சி நன்மைகள்:
எடையை குறைக்க உதவும் :
எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் எடையை விரைவாக குறைக்க முடியும். ஏனெனில் இந்த நிலையில் நடைபயிற்சி செய்தால் உடலின் அனைத்து பாகங்களிலும், தசைகளிலும் இயக்கம் ஏற்படும். இதனால் கொழுப்பு எளிதில் கரைந்து விடும் எனவே குறுகிய காலத்தில் விரைவாக எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த 8 வடிவ நடைபயிற்சி சிறந்த தேர்வாகும்.
பிபி கட்டுக்குள் இருக்கும் :
உங்களுக்கு உயர்த்தம் அழுத்தம் இருந்தால் இந்த எட்டு வடிவில் நடந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று ஒரு ஆய்வு சொல்லுகின்றது. அதுமட்டுமின்றி, இப்படி நடப்பதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும், மன அழுத்தம் குறையும். இதனால் உங்களது பிபியும் கட்டுக்குள் இருக்கும்.
தசைகள் வலுவடையும் :
எட்டு வடிவில் நடைபயிற்சி செய்வதன் மூலம் தசைகள் அதிகமாக வேலை செய்யப்படுகின்றன. அதாவது வளைந்து நடப்பதால் வயிறு மற்றும் தொடைகளுக்கு அருகில் உள்ள தசைகள் வலுவடைகின்றது. இதனால் கொழுப்பு சுலபமாக கரையும் மற்றும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
மன அழுத்தம் & பதட்டம் குறையும் :
எட்டு வடிவில் நடப்பதன் மூலம் ஒரு நபரின் மகிழ்ச்சி அதிகரிக்கிறது தெரியுமா? இதனால் மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும். இது தவிர உடல் சமநிலையும் மேம்படும்.
முழங்கால் வலியை குறைக்கும் :
இந்த எட்டு வடிவ நடைபயிற்சி கீழ்வாதம், முழங்கல் வலியை குறைக்க பெரிதும் உதவுகிறது. எனவே உங்களுக்கு ஏதேனும் முழங்கால் வலி பிரச்சனை இருந்தால் இந்த உடற்பயிற்சியை உடனே செய்ய ஆரம்பியுங்கள்.