குளிர்காலத்தில் முகப்பரு ரொம்ப வருதா? இந்த '1' பொருள் முகத்தை பளிச்னு மாத்திடும்

Pimples On Face In Winter : குளிர்காலத்தில் முகப்பரு பிரச்சனை அதிகமாக இருந்தால் அது வருவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றிற்கான சில வீட்டு வைத்தியம் பற்றி இங்கே பார்க்கலாம்.


குளிர்காலத்தில் பலருக்கு சரும பிரச்சனைகள் வருவது வழக்கம். அதுவும் குறிப்பாக குளிர்காலத்தில் பலருக்கு முகப்பருக்கள் தொந்தரவு செய்யும். ஏனெனில் குளிர் காற்று காரணமாக தோல் ஈரப்பதத்தை இழந்து வறட்சியாகிறது. இதன் காரணமாக முகத்தில் பருக்கள் தோன்ற ஆரம்பிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், முகப்பருவை போக்க பலர் பல்வேறு வகையான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவார்கள். ஆனால் அவை சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். அப்படியானால் குளிர் காலத்தில் ஏற்படும் முகப்பருக்களை நீக்குவது எப்படி என்று உங்களுக்கு தெரியவில்லையா? இதற்காக சில வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படிங்க: 30 வயசு ஆச்சா.. அப்போ 'இந்த' சரும பராமரிப்பு குறிப்புகளை பாலோ பண்ணுங்க

Latest Videos

குளிர்காலத்தில் முகப்பருக்கள் வருவதற்கான காரணங்கள் :

குளிர்காலத்தில் பொதுவாகவே நாம் நம்மை பராமரிப்பதில் அலட்சியமாக இருப்போம். எந்த அளவிற்கு என்றால், தண்ணீரைக் கொண்டு முகத்தைக் கூட கழுவ மாட்டோம். அந்த அளவிற்கு சோம்பேறித்தனமாக நாம் இருப்போம். இதனால் முகப்பருக்கள் வர ஆரம்பிக்கும். அதுவும் குறிப்பாக , எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு முகத்தில் அழுக்குகள், தூசிகள் படிந்து முகத்தில் அதிகளவு பருக்கள் வரும். இது தவிர குறைவாக தண்ணீர் குடிப்பது மன அழுத்தம் ஆரோக்கியமற்ற உணவு ஹார்மோன் சமநிலை போன்றவற்றால் கூட குளிர்காலத்தில் முகப்பருக்கள் அதிகமாக வருவதற்கு காரணமாகும்.

இதையும் படிங்க:  கண்ணாடி போல 'சருமம்' பளபளக்கனுமா? இந்த உணவுகள் போதும்.. டாக்டர் சிவராமன் சூப்பர் டிப்ஸ்!! 

குளிர்காலத்தில் முகப்பருக்களை தவிர்க்க சில டிப்ஸ் :

1. குளிர்காலத்தில் சருமத்தை எப்போதுமே சுத்தமாக வைத்திருங்கள். அதுவும் குறிப்பாக உங்களுக்கு எண்ணெய் சருமம் இருந்தால் அடிக்கடி உங்களது முகத்தை கழுவுங்கள். முக்கியமாக அதிகளவு எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

2. அதுபோல உங்களது சருமம் பிசுபிசுப்பாக இல்லாமல் இருக்க வெள்ளரிக்காய் சாற்றை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு முகத்தை கழுவினால் சருமத்தில் அழுக்குகள் நீங்கி முகம் பார்ப்பதற்கு பொலிவாக இருக்கும்.

3. உங்களது சருமம் வறண்டு இருந்தால் குளிர்காலத்தில் அதிக கிரீம்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வேண்டுமானால் நீங்கள் ரோஸ் வாட்டரில் சிறிதளவு கிளிசரின் சேர்த்து அதை முகத்தில் தடவலாம்.

4. குளிர்காலத்தில் ஏற்படும் முகப்பருக்களை தவிர்க்க கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவலாம். கற்றாழை ஜெல்லில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகத்தில் உள்ள பருக்களை சுலபமாக அகற்றி விடும்.

5. அதுபோல, முல்தானி மெட்டி, ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனத்தை கலந்து அதை முகத்தில் தடவி வந்தால் குளிர்காலத்தில் ஏற்படும் முகப்பருக்கள் நீங்கிவிடும்.

6. குளிர்கால முகப்பருக்களை போக்க கடலைமாவில் ஃபேஸ் பேக் போட்டால் முகப்பருக்கள் நீங்கும் மற்றும் முகம் மின்னும்.

7.  மஞ்சள் மற்றும் வேப்பிலையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இவை இரண்டையும் அரைத்து முகத்தில் அப்ளை செய்தால் முகப்பருக்கள் நீங்கிவிடும்.

நினைவில் கொள் :

- குளிர்காலத்தில் முகப்பரு வருவதை தடுக்க உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருங்கள். இதற்கு தினமும் 2 லிட்டர் அளவு தண்ணீர் குடியுங்கள்.

- அதுபோல ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டுமின்றி சரும பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

- குளிர்கால முகப்பருவை தவிர்க்க மேலே சொன்ன முறைகளைத் தவிர வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். இது தவிர முளைகட்டிய பயிர்கள், தயிர் போன்றவற்றையும் அதிகமாக சாப்பிடுங்கள்.

இதன்படி நீங்கள் முறையாக பின்பற்றி வந்தால் குளிர் காலத்தில் இனி முகப்பரு பிரச்சனை வரவே வராது.

click me!