நீதா அம்பானி மும்பையில் நடந்த நிகழ்வில் தனது பிரம்மாண்டமான வைர நகைகளால் அனைவரையும் கவர்ந்தார். நகை நிபுணர் ஜூலியா சாஃப், நீதாவின் காதணிகளின் அளவைப் பாராட்டியதுடன், அவற்றின் மதிப்பையும் சுட்டிக்காட்டினார்.
பிரபல தொழிலதிபரும் ஸ்டைல் ஐகானுமான நீதா அம்பானி மும்பையில் நடந்த என்எம்ஏசிசி ஆர்ட்ஸ் கஃபே வெளியீட்டு விழாவில் பங்கேற்று ஃபேஷன் உலகை மீண்டும் ஆச்சரியப்படுத்தினார். ஆடம்பரமான நகைகளுக்கு பெயர் பெற்ற நீதா, நேர்த்தியையும் கம்பீரத்தையும் வெளிப்படுத்தும் அவரது சமீபத்திய தோற்றத்தின் மூலம் தலைப்புச் செய்திகளை உருவாக்கினார்.
நீதா அணிந்திருந்த வைர நகைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ஹ்டது. அமெரிக்க இன்ஃப்ளூயன்ஸரும் நகை நிபுணரான ஜூலியா சாஃப் நீதா அம்பானியை பாராட்டி உள்ளார்.. இன்ஸ்டாகிராமில் ஒரு ரீலைப் பகிர்ந்துள்ள அவர் “ நீதா அம்பானியின் மகத்தான வைரங்கள் என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார்.
undefined
2024ல் அம்பானி குடும்பத்தில் அதிகம் தேடப்பட்ட நபர்; முகேஷ் அம்பானி, நீதா அம்பானி இல்ல!
அவரின் பதிவில், நீதா அம்பானியின் காதணிகளின் அளவு குறித்து நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். மேலும் “உண்மையாகவே நீதா அம்பானியின் காதுகள் பாவம். அதற்காக நான் வருந்துகிறேன். நாள் முழுவதும் உங்கள் கையால் இரண்டு கற்பாறைகளை வைத்திருப்பதை கற்பனை செய்து பாருங்கள்; இப்போது நாள் முழுவதும் உங்கள் காதுகளில் நான்கு கற்பாறைகளை வைப்பதைப் பற்றி சிந்தியுங்கள். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் இரண்டு முறை கண் சிமிட்டுங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
நீதா அம்பானியின் காதணிகளில் மிகவும் தனித்துவமான விஷயம் என்னவென்றால், மில்லியன் கணக்கான மதிப்புள்ள இந்த பிரம்மாண்டமான வைரங்கள் ஒன்றையொன்று எளிதில் கீறிவிடும். ஆனால் நீங்கள் 100 பில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ளவராக இருக்கும்போது அது பெரிய பிரச்சனை இல்லை. நீதா அம்பானியின் இதய வடிவ வைர மோதிரம், வைர பட்டாம்பூச்சி ப்ரூச் ஆகியவை மிகவும் அற்புதமாக இருந்தன” என்று குறிப்பிட்டுள்ளார்.
நட்சத்திர குழந்தைகள் படிக்கும் திருபாய் அம்பானி பள்ளிக் கட்டணம்! ஒரு மாதத்திற்கே இத்தனை லட்சமா?
நீதா அம்பானியின் தோற்றம்
இந்த நிகழ்விற்கு, நீதா அம்பானி செலின் வெள்ளை நிற பட்டு மேலாடையை அணிந்திருந்தார், கழுத்தில் ஒரு தைரியமான வில் காலர் இருந்தது. நேர்த்தியான முழு கை பிளவுச் கிளாசிக் பிளாக் ஸ்ட்ரெய்ட்-ஃபிட் கால்சட்டையுடன் இணைக்கப்பட்டது, கருப்பு மற்றும் வெள்ளை கலவையானது ஒரு ஃபேஷன் விருப்பமாக உள்ளது என்பதை நிரூபிக்கிறது.
நீதா அம்பானியின் தனித்துவமான பேஷன் தேர்வு, ஜூலியா சாஃப் உட்பட அபிமானிகளுக்கு, காலத்தால் அழியாத நேர்த்தியுடன் செழுமையையும் தடையின்றி கலக்கக்கூடிய அவரது திறனைப் பார்த்து பிரமிப்பு ஏற்பட்டது.