பாலை விட சத்து மிகுந்த 'ராகி'.. ஆனா இவங்க மட்டும் கண்டிப்பா சாப்பிடக் கூடாது

By Kalai Selvi  |  First Published Dec 28, 2024, 10:26 AM IST

Ragi Side Effects : ராகியின் பலன்கள் பல என்றாலும் உடலில் சில பிரச்சனை உள்ளவர்கள் இதை எடுத்துக் கொள்ளக் கூடாது. அது யார் யார் என்று இங்கு காணலாம்.


ராகி தானிய வகைகளில் ஒன்றாகும். இது 'கேழ்வரகு' என்றும் அழைக்கப்படுகிறது. இதில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் நல்ல அளவில் உள்ளன. முக்கியமாக, பாலை விட ராகியில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. மேலும் ராகி குளிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஏனெனில் இது வெப்பத்தன்மையை கொண்டுள்ளதால் குளிர்காலத்தில் இதை சாப்பிடுவது ரொம்பவே நல்லது. அதாவது, உடலுக்கு தேவையான வெப்பத்தை நமக்கு அளித்து, குளிர்ச்சி எதிர்த்து போராடவும் உதவுகிறது.

அதுமட்டுமின்றி ராகியில் கார்போஹைட்ரேட் அரிசியைவிட குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள், எடையை குறைப்பவர்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும். ராகில் இருக்கும் இரும்புச்சத்து ரத்த சோகை பிரச்சனையை சரி செய்ய உதவும். ராகி ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கினாலும் உடலில் சில பிரச்சனையுள்ளவர்கள் ராசியை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அது யார் யார் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க:  கேழ்வரகு மாவு கெட்டுப் போகாமல் வருட கணக்கில் பயன்படுத்த சூப்பரான டிப்ஸ் இதோ!!

கேழ்வரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் :

சர்க்கரை நோய்க்கு நல்லது :

கேழ்வரகில் நார்ச்சத்து அதிகமாகவும் அரிசியை விட கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது ரொம்பவே நல்லது. மேலும் இதில் கிளைசெமிக் குறியீடு குறைவாகவும் உள்ளது. எனவே, இது ரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சர்க்கரை நோயாளிகள் இதை காலை அல்லது மதிய உணவில் எடுத்துக் கொள்ளலாம்.

ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் :

உடலில் போதுமான அளவு இரும்பு சத்து இல்லாததால் ரத்த சோகை பிரச்சனை ஏற்படும். எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் ராகியை எடுத்துக் கொண்டால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

எடையை குறைக்கும் :

ராகியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால், இது நீண்ட நேரம் பசி உணர்வை ஏற்படுத்தாது. இதனால் மீண்டும் மீண்டும் சாப்பிடவது தடுக்கப்படும். இதனால் எடையும் சுலபமாக குறைந்துவிடும். எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ராகியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தூக்கமின்மை & மனசோர்வு :

ராகியில் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருக்கிறது. இது மன அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. எனவே உங்களுக்கு மனசோர்வு அல்லது தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் நீங்கள் உங்களது உணவில் ராகியை சேர்த்துக் கொள்ளுங்கள்.

எலும்புகள் வலுவாகும் :

பாலை விட ராகியில் தான் கால்சியம் அதிகமாகவே உள்ளதால் இது எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்த பெரிதும் உதவுகிறது. எனவே கர்ப்பிணிகள் மற்றும் வளரும் குழந்தைகளுக்கு கேழ்வரகு நல்ல ஆதாரமாகும்.

இதையும் படிங்க:  ராகி கூழ் 'இப்படி' செய்து குடிங்க.. உடலை இரும்பாக்கும்.. சிம்பிள் ரெசிபி

கேழ்வரகை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
 
சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் : 

உங்களுக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருந்தால் நீங்கள் கேழ்வரகை சாப்பிடக்கூடாது மீறினால் சிறுநீரக பிரச்சனை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் ராகியில் அதிகளவு கால்சியம் உள்ளது.

தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் :

தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு கேழ்வரகு நல்லதல்ல. மேலும் அதிகரிக்கும்.

குறிப்பு :

கேழ்வரகை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் எனவே மிதமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

click me!