இந்த சிப்ஸ் எப்படி தயாரிக்கப்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சிற்றுண்டிகளில் உருளைக்கிழக்கு சிப்ஸ் கண்டிப்பாக இடம்பெறும். நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் போது அல்லது பயணத்தின் போது அல்லது படம் பார்க்கும் போது எல்லா சூழலிலும் சிப்ஸ் பாக்கெட்கள் தவறாமல் இடம்பெறும். ஆனால் இந்த சிப்ஸ் எப்படி தயாரிக்கப்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிப்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் உருளைக்கிழங்கு சாக்கு மூட்டை தொடங்கி சிப்ஸ் தயாராகி பாக்கெட்களில் அடைக்கப்படுவது வரை என முழு செயல்முறையையும் பார்க்க முடிகிறது. அனிகைத் லுத்ரா என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
கிச்சனில் துர்நாற்றம்; என்ன செய்யணும்னு தெரியலயா? சிம்பிளான டிப்ஸ் இதோ..!!
அந்த வீடியோவில், முதலில் தொழிலாளர்கள் உருளைக்கிழங்கு மூட்டைகளை கொண்டு செல்வதை பார்க்ல்லாம். உருளைக்கிழங்குகளை கவனமாக கழுவி, உரித்து, துல்லியமான பகுதிகளாக வெட்டி, மீண்டும் கழுவி காயவைத்து, எண்ணெயில் பொறித்து எடுப்பது என இந்த செயல்முறை விரிவடைகிறது.
முதலில் உருளைக்கிழங்கு மூட்டைகளை அவிழ்த்து ஒரு இடத்தில் கொட்டுகின்றனர். பின்னர் உருளைக்கிழங்கு நன்கு கழுவப்பட்டு, ஒரு இயந்திரத்தின் மூலம் தோலுரிக்கப்படுகிறது. அதன்பின்னர் சிப்ஸ் தயாரிக்க ஏற்ற வடிவத்தில் உருளைக்கிழங்கு வெட்டப்படுகிறது. பின்னர் மீண்டும் கழுவப்பட்டு, அதை வெட்டும் இயந்திரத்தில் போடப்படுகிறது. பின்னர் சிப்ஸ் வடிவத்தில் வெளிவருகிறது.அந்த சிப்ஸ் மீண்டும் தண்னீரில் நனைக்கப்பட்டு உலரவைக்கப்படுகிறது. பின்னர் சூடான எண்ணெயில் பொறித்தெடுக்கப்படுகிறது. பின்னர் அந்த சிப்ஸுக்கு சுவையூட்ட சில மசாலா பொருட்கள் சேர்க்கப்படுகிறது. அதன்பின்னர் பேக் செய்யப்பட்டு, அந்த சிப்ஸ் பாக்கெட்கள் பெரிய பெட்டிகளில் அடைக்கப்படுவதையும் பார்க்க முடிகிறது.
இந்த வீடியோ இதுவரை 1.5 லட்சம் முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஸ்டா பயனர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.