சமீபத்தில், கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு பெண், இறந்தவர்களுடன் பேச முடியும் என்று கூறியிருக்கிறார்,
மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்பது உலகில் அதிகம் விவாதிக்கப்படும் தலைப்புகளில் ஒன்றாக உள்ளது. எனவே மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை, பல துறைகளைச் சேர்ந்த பல நிபுணர்களால் பல நூற்றாண்டுகளாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு பெண், இறந்தவர்களுடன் பேச முடியும் என்று கூறியிருக்கிறார்,
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் எமிலி டெக்ஸ்டர் என்ற 31 வயதான அந்த பெண், மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது? என்ற கேள்விக்கான பதில் தன்னிடம் இருப்பதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து அந்நாட்டின் ஊடகத்திற்கு பேட்டியளித்த எமிலி டெக்ஸ்டர் “ ஒருவர் இறந்த பிறகு, அவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பப்படுகிறார்கள், அதை ஒரு ஆன்மீக ஸ்பா என்று சொல்லலாம். அங்கு அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பு கொண்டு, தங்கள் இறந்த நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுகிறார்கள். அவர்கள் அந்த இடத்தில் ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரை செலவிடுகிறார்கள்.
ஒரு நாள் தங்கவே ரூ.4 லட்சம்.! இந்தியாவில் உள்ள மிகவும் விலையுயர்ந்த ராயல் ஹோட்டல்கள் இவை தான்..
எனவே நாம் இறந்த உடன், நமது அன்புக்குரியவர்களுடன் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் நேரம் செலவிடுறோம், பின்னர் மற்றொரு இடத்திற்கு செல்கிறோம், அங்கு மனிதர்களாக இருந்தபோது நமக்கு ஏற்பட்ட அனைத்து சிரமங்களையும் சமாளித்து குணமடைகிறோம். எனினும் இந்த இடத்தின் கால அளவு வாரங்களில் இருந்து மாதங்கள் வரை மாறுபடும், ஏனெனில் இது நபர் மற்றும் அவர்களின் பாதையைப் பொறுத்தது. இங்கே, அவர்கள் தங்கள் கர்மாவுடன் நேருக்கு நேர் வந்து தங்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்கிறார்கள்.
இந்த நிலைக்குப் பிறகு, ஆன்மா ஒரு புதிய சீர்திருத்த பாதையில் நடக்கத் தொடங்குகிறது. இதற்கிடையில், அவர்களது குடும்பத்தினர் அல்லது நெருங்கிய நண்பர் ஒருவர் இறந்துவிட்டால், அவர்கள் தங்கள் ஆன்மாக்களை வழிநடத்துகிறார்கள், அதனால் அவர்கள் பிற்கால வாழ்க்கையில் அதிகம் பாதிக்கப்பட மாட்டார்கள். இதற்குப் பிறகு, ஆத்மா மற்றொரு உடலை எடுத்து ஒரு புதிய வாழ்க்கையை வாழ்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
தான் சிறுவயதில் காட்டில் விளையாடும் போது இறந்தவர்களுடன் உரையாடியதாகவும் அல்லது சில சமயங்களில் இறந்த உறவினர்களை தன் வீட்டில் பார்த்ததாகவும் அவர் கூறுகிறார். ஆரம்பத்தில், இது சாதாரணமானது என்று அவள் நினைத்தாள், அது அனைவருக்கும் நடக்கும். எமிலி டெக்ஸ்டர் தனது 8-வது வயதில் தனக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட அமானுஷ்ய சக்தி உணர்ந்ததாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் "எனக்கு நடந்த விசித்திரமான விஷயங்களைப் பற்றி நான் என் அம்மாவிடம் சொன்னேன், இந்த விஷயங்கள் என்னவென்று என் அம்மாவுக்குத் தெரியாது.. நான் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட வேண்டும் என்று விரும்பியதால் தனது திறன்களை மறைக்க முயன்றேன். எனினும் எனது 20 வயதில் எனக்கு இருந்த சக்திகளை ஏற்றுக்கொண்டேன். அப்போது முதல் நான் இறந்தவர்களுடன் பேசி வருகிறேன். உயிருடன் இருக்கும் மக்களுக்கு வழிகாட்டிகளாக ஆவிகள் செயல்படுகின்றன.” என்று தெரிவித்தார்.