Today astrology: இன்று முதல் மார்ச் 15 வரை இந்த ராசிக்காரர்களின் தலை விதி தலைகீழாக மாறும்! இன்றைய ராசி பலன்!

By Anu Kan  |  First Published Mar 12, 2022, 6:09 AM IST

Today astrology: ஜோதிடத்தின் படி, சூரியனின் சஞ்சாரம் 12 ராசிகளையும் பாதிக்கும். ஆனால், இந்த 7 ராசிகளுக்கு மட்டும் இன்று முதல் 15-ம் தேதி வரை சூரிய பகவானின் சிறப்பு அருள் கிடைக்கும்.


ஜோதிடத்தின் படி, ஒரு கிரகம் மாறும் போதும், அல்லது தனது ராசியை மற்றும் போதும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். ஆனால், இந்த ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியாகவும், சிலருக்கு பிரச்சனையாகவும் இருக்கும். மார்ச் 15-ம் தேதி சூரிய கிரகம் தனது நண்பரின் ராசியான மீனத்தில் பிரவேசிக்கப் போகிறது. சூரியனின் இந்த சஞ்சாரம் 12 ராசிகளையும் பாதிக்கும். ஆனால், இந்த 7 ராசிகளுக்கு மட்டும் இன்று முதல் 15 வரை சூரிய பகவானின் சிறப்பு அருள் கிடைக்கும்.

இந்த 7 ராசிகளுக்கு மட்டும் இன்று முதல் 15 வரை வியாபாரத்திலும் லாபம் இருக்கும். கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெறுவீர்கள். பணியிடத்திலும் நல்ல நிலை காணப்படும். உங்கள் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.மேலும், என்னென்ன பலன்கள் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

undefined

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு, சூரிய பகவான் 11வது வீட்டில் சஞ்சரிக்கிறார். இது வருமான விகிதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் உங்கள் வருமானம் கூடும். வியாபாரத்தில் திடீர் பணவரவு ஏற்படும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் திட்டம் வெற்றி பெறும். சனிக்கிழமை வேலை செய்வதில் புதிய ஆற்றல் இருக்கும். முதலீடு செய்ய இது ஒரு நல்ல நேரம். திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம்.

மிதுனம்:

இந்த ராசிக்காரர்களுக்கு அவர்களின் மூன்றாம் வீட்டின் அதிபதி சூரியன் ஆகும். மேலும், சூரியனின் சஞ்சாரம் மிதுன ராசியின் பத்தாமிடத்தில் அதாவது தொழில் வீடாக இருக்கும். இந்த காலகட்டத்தில் பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு நிலைத்திருக்கும். நல்ல பணமும் கிடைக்கும். குடும்பத் தேவைகளை முழுமையாகக் கவனிப்பீர்கள். இன்று முதல், சுறுசுறுப்புடன் உங்கள் ஒவ்வொரு பணியையும் மிக எளிதாக முடிப்பீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி காண்பார்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு,சூரியனின் சஞ்சாரம் ஒன்பதாம் வீட்டில் இருக்கும். எனவே, இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். புதிய பொறுப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் பணித் துறையில் பெரிய மாற்றம் ஏற்படலாம். குடும்பத்தினால் மகிழ்ச்சி ஏற்படும். வேலைத் துறையில் சனிக்கிழமை சாதகமாக இருக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியன் ராசி மாற்றம் நன்மை தரும். உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்கு அதாவது அதிர்ஷ்டம் மற்றும் கர்மாவின் அதிபதி சூரிய பகவான். உங்கள் எண்ணங்கள் உறுதியாகும். பேச்சு சாமர்த்தியம் மற்றும் உங்கள் சுறுசுறுப்பைப் பயன்படுத்தி பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவையும் மகிழ்ச்சியையும் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் ஏதேனும் வாகனத்தையும் வாங்கலாம்.

மீனம்: 

மீனம் ராசிக்காரர்களுக்கு,சூரியனின் சஞ்சாரம் எட்டாம் வீட்டில் இருக்கும். இந்த வாரம் நன்றாக இருக்கும். நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழிலில் லாபம் கூடும். வேலை நிலைமைகளும் சிறப்பாக இருக்கும். விரும்பிய பலன் கிடைக்கும். எனவே, இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் புகழ் அதிகரிக்கும் மற்றும் புதிய பொறுப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

கும்பம்: 

இன்று நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். இந்த வாரம், உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் விருப்பப்படி உங்கள் வேலைத் திட்டங்களை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலையில் கவனம் செலுத்துவீர்கள். மன அமைதியும் கிடைக்கும்.

சிம்மம்:  

சிம்மம் ராசிக்காரர்களுக்கு,சூரியனின் சஞ்சாரம் 12ம் வீட்டில் இருக்கும். சனிக்கிழமை இன்று சுப காரியங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்குவது சாதகமாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுதலை பெறலாம். இது தவிர வேலையில் நல்ல பணமும் கிடைக்கும்.

மேலும் படிக்க...Today astrology: கும்ப ராசியில் ராகு கேது பெயர்ச்சி... இந்த 5 ராசிக்காரர்களுக்கு அடித்தது ''ஜாக்பார்ட்''...

click me!