ET movie: சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் நாள் வசூல் ...தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா..?

Anija Kannan   | Asianet News
Published : Mar 11, 2022, 09:54 AM ISTUpdated : Mar 11, 2022, 09:55 AM IST
ET movie: சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் நாள் வசூல் ...தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா..?

சுருக்கம்

Etharkkum Thunindhavan movie: இரண்டு ஆண்டுகளுக்கு பின் திரையரங்குகளில், வெளியான சூர்யாவின் ''எதற்கும் துணிந்தவன்'' படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வந்துள்ளது. 

சூர்யாவின் நடிப்பில், பாண்டியராஜ் இயக்கத்தில், உருவான  எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக, நேற்று திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸானது.

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை மையமாக வைத்து, எடுக்கப்பட்ட படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக, பேமிலி ஆடியன்ஸ் மத்தியில், பாஸிட்டிவான விமர்சனத்தை பெற்று வருகிறது.  ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ் என பக்கா கமர்ஷியல் படமாக ரிலீசான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சூர்யாவுடன் நடித்துள்ள நட்சத்திரங்கள்:

சூர்யாவின் 40வது திரைப்படமான எதற்கும் துணிந்தவன் படத்தினை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இமான் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், வில்லனாக நடிகர் வினய்யும் நடித்துள்ளார்.மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், புகழ் மற்றும் சூரி, வினை, ஜெய் பிரகாஷ், தேவதர்ஷினி என பலர் நடித்துள்ளனர்.  

படம் பற்றிய தகவல் என்ன..?

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா நடிப்பில் திரையரங்கில் வெளியாகும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன் ஆகும். கடைசியாக காப்பான் படம் 2019ம் ஆண்டு திரையரங்கில் வெளியாகி இருந்தது.  அதன்பிறகு சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற  படங்கள் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

படத்தின் முதல் நாள் வசூல் விவரம்:

இந்நிலையில், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதில், தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் முடிவில் ரூ. 6ல் இருந்து 7 கோடி வசூலித்துள்ளதாம். அதேபோன்று, கேரளாவில் முதல் நாளில் ரூ. 1 கோடி வசூலித்துள்ளதாம்.

மேலும் படிக்க...ET movie : முருகன் பாடலால் எதற்கும் துணிந்தவன் படத்துக்கு புது சிக்கல்... பாடலை தூக்கச் சொல்லி போலீஸில் புகார்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Winter Tips : குளிர்காலத்தில் சளி அடிக்கடி வருதா? இந்த உணவுகளை உடனே ஒதுக்கிவிடுங்க
Thyroid Belly : தைராய்டால் வந்த அதிக எடை, 'தொப்பை' அற்புத மூலிகை பானம்! எப்படி தயார் செய்யனும்?